மீண்டும் கம் பேக் கொடுக்கும் ஆரண்ய காண்டம் புகழ் யாஸ்மின் பொன்னப்பா!

'ஆரண்ய காண்டம்' படத்தின் மூலம் மக்களிடையே கவனம் ஈர்த்த நடிகை யாஸ்மின் பொன்னப்பா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையுலகுக்கு திரும்ப உள்ளார்.

1 /6

'ஆரண்ய காண்டம்' படத்தின் மூலம் மக்களிடையே கவனம் ஈர்த்த நடிகை யாஸ்மின் பொன்னப்பா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையுலகுக்கு திரும்ப உள்ளார்.

2 /6

மனோதத்துவத்தில் மேற்படிப்பை முடித்து திரும்பி இருக்கிறார். நடிகராகவும் தன்னை மேம்படுத்த பல பயிற்சிகளையும் எடுத்துக்கொண்டு தற்போது திரைத்துறையில் மீண்டும் தன்னை பிசியாக மாற்றிக்கொள்ள இருக்கிறார்.

3 /6

கேமரா முன் நின்று நடித்த அந்த மேஜிக் தருணங்களை நான் மிகவும் மிஸ் செய்தேன். வித்தியாசமான கதைக்கலங்களுக்குள்ளும் மற்றும் ஏராளமான கதாபாத்திரங்களிலும் என்னை முழுமையாக இணைத்துக் கொண்டு நடிப்பில் இன்னும் பண்பட்ட நிலையை அடைய விரும்புகிறேன்

4 /6

இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழ் சினிமா இன்னும் ஆச்சரியமான கலங்களில் பயணிக்க துவங்கியிருக்கிறது. இதில் என் பங்களிப்பையும் இணைத்துக் கொண்டு என்னையும் மெருகேற்ற விரும்புகிறேன். பல அற்புதமான படைப்பாளிகளுடன் இணைந்து பணியாற்றவும் விரும்புகிறேன் என்கிறார் கண்களில் கனவுகள் மின்ன.

5 /6

தன்னுடைய மனோதத்துவப் பின்னணியை சினிமாவிலும் பயன்படுத்தி நடிப்பில் அடுத்த பரிமாணத்தை எட்ட காத்திருக்கிறார்.  

6 /6

படத்தில் எவ்வளவு நேரம் நடிக்கவிருக்கிறோம் என்பதை தாண்டி சில நிமிடங்கள் வந்தால் கூட தனக்கான கதாபாத்திரம் எவ்வளவு ஆழமாக உள்ளது, கதையில் தனது கதாபாத்திரம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கும் என புரிந்து நடிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் யாஸ்மின் பொன்னப்பா.