TN Govt | தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2 முக்கிய உத்தரவு!

TN Govt Latest Updates: பணி ஓய்வூதியத்தை, குடும்ப ஓய்வூதியமாக மாற்றவும், தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தின் கீழ் ஓய்வூதியர் நியமனதாரர் அவசியம் குறித்தும் முக்கிய அப்டேட்.

Government Pensioners News In Tamil: தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் சார்ந்து முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதுக்குறித்த விவரங்களை பார்க்கலாம். 

1 /12

தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் சார்ந்து முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதுக்குறித்த விவரங்களை பார்க்கலாம். 

2 /12

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில், அவ்வப்போது அகவலைப்படி உயர்வு, சம்பளம் உயர்வு, அகவலைப்படி நிலுவைத்தொகை உட்பட புதிய நடைமுறை மற்றும் சலுகை சார்ந்த அறிவிப்புகளும் அவ்வப்போது வெளியிடப்படும். அந்த வகையில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் சார்ந்து முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. 

3 /12

தற்போது நடைமுறையில் உள்ள பணி ஓய்வூதியத்தை, குடும்ப ஓய்வூதியமாக மாற்றம் செய்வதில் அதிக காலதாமதமும் நடைமுறை சிக்கல் அதிகமாக உள்ளதாகவும் அரசு கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. 

4 /12

தற்போது நடைமுறையில் உள்ள செயல்முறையை எளிமைப்படுத்துவதற்கு தமிழக அரசு முடிவெடுத்து உள்ளது. இனி வரும் காலங்களில் புதிய ஓய்வூதியதாரர்களுக்கு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை தளத்தில் கணவன் மற்றும் மனைவியின் அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படும். 

5 /12

எனவே குடும்ப ஓய்வூதியம் கோரும் தேர்வுகளில் அவர்கள் கணவன் மற்றும் மனைவியின் இறப்பு சான்றிதழ் மட்டுமே சமர்ப்பித்தால் போதுமானது என்று அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அரசாணை கூறப்பட்டு உள்ளது. 

6 /12

அதேபோல தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் குடும்ப பாதுகாப்பு நிதித் திட்டம் நியமனதாரரை நியமனம் செய்வது தொடர்பான தெளிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது. 

7 /12

தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் குடும்பப் பாதுகாப்பு நிதி திட்டத்தின் கீழ் ஓய்வூதியதாரரின் விருப்பத்தின் பெயரில் அவருடைய ஓய்வூதியத்திலிருந்து சந்தா தொகையானது பிடித்தம் செய்யப்படும். 

8 /12

அந்த தொகையை ஓய்வூதியர் இறக்கும் காலத்தில், அவர்தம் துணைவருக்கோ அல்லது அவருடைய துணைவர் உயிரோடு இல்லாதபோது ஓய்வூதியர் நியமனம் செய்த நியமனதாரருக்கோ இத்திட்டத்தின் கீழ் ஒட்டுமொத்த தொகையானது வழங்கப்படும். 

9 /12

மேலும் துணைவர் உயிரோடு இல்லாமல் இருந்தாலோ அல்லது நியமனதாரர் எவரும் நியமிக்கப்படாத நிலையில், ஒட்டுமொத்த தொகையானது மறைந்த ஓய்வூதரின் வாரிசுகளுக்கு சமமாக பிரித்து வழங்கப்படும்.

10 /12

ஏற்கனவே பல்வேறு ஓய்வூதியதாரர்களுடைய சங்கங்கள் மற்றும் ஓய்வூதியதாரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு சில தெளிவுரை வழங்கியுள்ளது.

11 /12

தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தின் கீழ், ஓய்வூதியர் இறந்த பின்பு வழங்கப்பட வேண்டிய ஒட்டு மொத்த தொகையினை பெறுவதற்கு உரிய நியமனதாரரை ஓய்வூதியரோ அல்லது அவரது துணைவரோ இருவரும் உயிரோடு இருக்கும்போதே நியமனம் செய்து கொள்ளலாம் என்று அரசு கடிதத்தின் வாயிலாக தெளிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

12 /12

எனவே தமிழக அரசு வழங்கியுள்ள அறிவுரையின் படி, உரிய வழிமுறைகளை பின்பற்றி தமிழ்நாடு அரசு ஓய்வூதிய குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்திற்கான நியமனதாரரை ஓய்வூதியரோ அல்லது அவருடைய துணைவரோ இருவரும் உயிரோடு இருக்கும்போதே நியமனம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுவதாக தமிழ்நாடு அரசு சிறப்பு செயலாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளத