8வது ஊதியக்குழு, 44% ஊதிய உயர்வு: நிதிச்செயலரின் ஹிண்ட்.... மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்

8th Pay Commission: வழக்கமாக, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. அவற்றில் பணவீக்க விகிதம் மற்றும் பிற பொருளாதார காரணிகளைக் கருத்தில் கொண்டு அரசாங்க ஊழியர்களின் ஒட்டுமொத்த ஊதியம் மாற்றியமைக்கப்படுகின்றது. 

8th Pay Commission: 8வது ஊதியக்குழுவின் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை அதிகரிப்பது குறித்து கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 2.57 மடங்கு ஃபிட்மெண்ட் ஃபாக்டரை பெற்று வருகிறார்கள். இதை 3.68 மடங்காக உயர்த்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை உள்ளது.  இப்படி நடந்தால், ஊழியர்களுக்கு சுமார் 44% ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

1 /10

அடுத்த ஊதியக்கமிஷன், அதாவது 8வது ஊதியக்குழுவின் உருவாக்கத்திற்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 8வது ஊதியக் குழு அமலுக்கு வந்தால், அதன் பின்னர், மத்திய அரசு ஊழியர்களின் மாத சம்பளம், அலவன்சுகள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தில் நல்ல ஏற்றம் இருக்கும். 

2 /10

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் 8வது ஊதியக்குழு பற்றிய அறிவிப்பு வெளிவரும் என மத்திய அரசு ஊழியர்களும் ஊதியதாரர்களும் ஆவலோடு காத்திருந்தார்கள். எனினும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அது தொடர்பான எந்த வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. இது ஊழிர் சங்கங்களுக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்தது. 

3 /10

இதற்கிடையில் நிதிச் செயலர் டிவி சோமநாதன் சனிக்கிழமையன்று, இரண்டு ஆண்டுகளுக்கு புதிய அமைச்சரவை செயலாளராக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டார். தற்போது இந்த பதவியில் ராஜீவ் கௌபா இருக்கிறார். அவரது 5 ஆண்டு பதவிக்காலம் இந்த மாத இறுதியில் நிறைவு பெறுகிறது. 

4 /10

டிவி சோமநாதன் புதிய அமைச்சரவை செயலாளராக பதவி ஏற்பது மற்றொரு விதத்திலும் முக்கியத்துவம் பெறுகிறது.  சமீபத்தில்தான், அதாவது மத்திய பட்ஜெட்டுக்கு பின், நிதித்துறை செயலர் டி.வி. சோமநாதன் ஒரு செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், 8வது ஊதியக்குழு 2026 ஆம் ஆண்டுதான் வரவஏண்டும் என்றும், அதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது என்றும் கூறினார். "8வது ஊதியக் குழு ஜனவரி 1, 2026 அன்றுதான் வரவேண்டும். நாம் தற்போது 2024 இல் இருக்கிறோம்," என்று அவர் தெரிவித்திருந்தார்.

5 /10

தற்போது நிதிச்செயலராக இருக்கும், இன்னும் சில நாட்களில் புதிய அமைச்சரவை செயலாரகவும் பொறுப்பேற்கவுள்ள டிவி சோமநாதன் கூறியுள்ளதை கவனித்துப்பார்த்தால், அவர் 8வது ஊதியக்குழு அமலுக்கு வராது என கூறவில்லை. அதை அமல்படுத்த கால அவகாசம் இருக்கிறது என்றுதான் கூறியுள்ளார். முக்கிய பொறுப்புகளை வகிக்கும் அவர் இப்படி கூறியுள்ளது மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. ஜூன் 2024 இல் 8வது ஊத்யக்குழுவின் உருவாக்கம் தொடர்பாக இரண்டு பிரதிநிதித்துவங்கள் பெறப்பட்டுள்ளதாக நிதித்துறை இணை அமைச்சர் (MoS) பங்கஜ் சவுத்ரியும் உறுதிப்படுத்தினார்.

6 /10

வழக்கமாக, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. அவற்றில் பணவீக்க விகிதம் மற்றும் பிற பொருளாதார காரணிகளைக் கருத்தில் கொண்டு அரசாங்க ஊழியர்களின் ஒட்டுமொத்த ஊதியம் மாற்றியமைக்கப்படுகின்றது. இதற்கு முன்னர் 7வது ஊதியக் குழு, பிப்ரவரி 2014ல் அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் ஜனவரி 1, 2016 முதல் அமலுக்கு வந்தன. 

7 /10

அதன் படி இந்த ஆண்டு 8வது ஊதியக்குழு அமைக்கப்பட்டால், அதன் பரிந்துரைகள் 2026 -இல் அமலுக்கு வர ஏதுவாக இருக்கும். இதன் காரணமாகத்தான் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களும் ஒய்வூதியதாரர்களும் இதை பற்றி மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

8 /10

8வது ஊதியக்குழுவின் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை அதிகரிப்பது குறித்து கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 2.57 மடங்கு ஃபிட்மெண்ட் ஃபாக்டரை பெற்று வருகிறார்கள். இதை 3.68 மடங்காக உயர்த்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை உள்ளது.  இப்படி நடந்தால், ஊழியர்களுக்கு சுமார் 44% ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

9 /10

8வது ஊதியக்குழு அமைக்கப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் மாற்றம் இருக்கும். இது தவிர ஊழியர்களின் அகவிலைப்படி (DA), வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA), போக்குவரத்து கொடுப்பனவு (TA) போன்ற பல்வேறு சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகளிலும் ஏற்றம் ஏற்படும் என்பதால் ஒட்டுமொத்தமாக அவர்களுக்கு பம்பர் ஊதிய உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

10 /10

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.