செப்டம்பர் 28ம் தேதி வெளியாகும் 7வது பே கமிஷன் அறிவிப்பு

7th pay commission Updatesமத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி! நான்கு சதவித டி.ஏ உயர்வு உட்பட பல அறிவிப்புகள் செப்டம்பர் மாதம் 28ம் தேதியன்று வெளியாகும்... 

 

52 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் உயரும். ஃபிட்மென்ட் ஃபேக்டரை உயர்த்த வேண்டும் என அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | 7th Pay Commission: ஓய்வூதியத்தில் அகவிலை நிவாரண தொகையை கணக்கிடுவது எப்படி? 

1 /5

அதிகபட்ச அடிப்படை சம்பளத்தில் 4 சதவீதம் டிஏ அதிகரிக்கும் ஒரு ஊழியரின் குறைந்தபட்ச சம்பளம் 56,900 38 சதவீத உயர்வுடன் மாதம் 21,622 ரூபாய் தற்போதைய டிஏ 34 சதவீதத்தில் மாதம் ரூ.19,346 அதிகரிக்கப்படும் DA தொகை மாதம் 2260 ரூபாய் ஆகும் வருடாந்த சம்பளம் 27,120 ரூபாய் அதிகரிக்கும்

2 /5

டிஏ 4 சதவீதம் அதிகரிக்கப்படுவதால் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 38 சதவீதமாக உயரும். உயர்த்தப்பட்ட டிஏ செப்டம்பர் மாத சம்பளத்துடன் வழங்கப்படும். ஜூலை 1 முதல் இது அமலுக்கு வருகிறது. அதாவது, நவராத்திரி நாட்களின் தொடக்கத்தில், செப்டம்பர் மாத சம்பளம் பெறும்போது ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத டிஏ நிலுவை கிடைக்கும்.  

3 /5

மத்திய அரசு ஊழியர்களின் DA நிர்ணயம் செய்வதற்கான அடிப்படையாக AICPI இன்டெக்ஸ் கருதப்படுகிறது. முதல் ஆறு மாதங்களுக்கான AICPI IW புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. ஜூன் மாதத்திற்கான குறியீடு 129.2ஐ எட்டியது. குறியீட்டு எண் அதிகரிப்பால், டிஏ 4 சதவீதம் அதிகரிக்கும் என்பது உறுதியாகிறது.

4 /5

செப்டம்பர் மாத சம்பளம் இரண்டு மாத நிலுவையுடன் அதாவது ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத டிஏ நிலுவையுடன் வழங்கப்படும்.

5 /5

மத்திய அரசு ஊழியர்களின் காத்திருப்பு முடிவுக்கு வருகிறது. இதற்கான அறிவிப்பை செப்டம்பர் 28ம் தேதி அரசு வெளியிடும். டிஏ வழங்கப்படும் தேதியும் இறுதி செய்யப்பட்டுள்ளது.