மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ ஹக் முக்கிய அப்டேட்: AICPI எண்கள் மூலம் கிடைத்த நல்ல செய்தி

7th Pay Commission: ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் தற்போது வரை அகவிலைப்படி 53 சதவீதத்தை எட்டி உள்ளது. இன்னும் ஜூன் மாத எண்கள் வரவேண்டும். அவை ஜூலை 31 அன்று வெளியிடப்படும்.

7th Pay Commission:இது ஜூலை மாதம். வழக்கமாக இதுதான் டிஏ குறித்த முடிவு எடுக்கும் மாதமாக இருக்கின்றது. இந்த மாதத்தில் தான் அகவிலைப்படி எவ்வளவு உயரம் என்பது தீர்மானிக்கப்படுகின்றது. ஆகையால் அகவிலைப்படி உயர்வு குறித்த தகவல்களுக்காக மத்திய அரசு ஊழியர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 50% அகவிலைப்படியும் ஓய்வூதியதாரர்களுக்கு 50% அகவிலை நிவாரணமும் கிடைத்து வருகின்றன. 2024 ஜனவரி மாதம் அகவிலைப்படி நான்கு சதவீதம் அதிகரிக்கப்பட்டது. அகவிலைப்படி விகிதம் பணவீக்க விகிதத்தை பிரதிபலிக்கும் நுகர்வோர் விலை குறியீட்டை (CPI) சார்ந்துள்ளது. AICPI குறியீட்டு எண்களின் அடிப்படையில் அகவிலைப்படையில் திருத்தம் செய்யப்படுகிறது. 

1 /10

நாடெங்கும் மழைக்காலம் தொடங்கிவிட்டது. மக்கள் மழையை ரசித்து வருகிறார்கள். இந்த தருணத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கும் பண மழை பொழியப் போகின்றது. மிக விரைவில் அவர்களுடைய அகவிலைப்படியில் ஏற்றம் ஏற்பட உள்ளது. இது குறித்து இந்த பதிவில் காணலாம்.

2 /10

இது ஜூலை மாதம். வழக்கமாக இதுதான் டிஏ குறித்த முடிவு எடுக்கும் மாதமாக இருக்கின்றது. இந்த மாதத்தில் தான் அகவிலைப்படி எவ்வளவு உயரம் என்பது தீர்மானிக்கப்படுகின்றது. ஆகையால் அகவிலைப்படி உயர்வு குறித்த தகவல்களுக்காக மத்திய அரசு ஊழியர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

3 /10

இதற்கிடையில் மே மாதத்திற்கான ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. இந்த எண்களின் அடிப்படையில் தற்போது வரை அகவிலைப்படி 53 சதவீதத்தை எட்டி உள்ளது. இன்னும் ஜூன் மாத எண்கள் வரவேண்டும். அவை ஜூலை 31 அன்று வெளியிடப்படும்.

4 /10

தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 50% அகவிலைப்படியும் ஓய்வூதியதாரர்களுக்கு 50% அகவிலை நிவாரணமும் கிடைத்து வருகின்றன. 2024 ஜனவரி மாதம் அகவிலைப்படி நான்கு சதவீதம் அதிகரிக்கப்பட்டது. அகவிலைப்படி விகிதம் பணவீக்க விகிதத்தை பிரதிபலிக்கும் நுகர்வோர் விலை குறியீட்டை (CPI) சார்ந்துள்ளது. AICPI குறியீட்டு எண்களின் அடிப்படையில் அகவிலைப்படையில் திருத்தம் செய்யப்படுகிறது. 

5 /10

பொதுவாக ஜனவரி மாத அகவிலைப்படி கடந்த ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையிலும், ஜூலை மாத அகவிலைப்படி ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீடு எண்களின் அடிப்படையிலும் தீர்மானிக்கப்படுகின்றது. ஜூலை 2024 அகவிலைப்படியை தீர்மானிக்க இதுவரை 5 மாதங்களுக்கான ஏஐசிபிஐ எண்கள் வந்துள்ளன. ஜூன் மாத எண்களும் வந்தவுடன் ஜூலை மாதத்திற்கான டிஏ உயர்வு (DA Hike) தீர்மானிக்கப்படும்.

6 /10

இதுவரையில் கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில் அகவிலைப்படி 3% அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது. இதைத் தொடர்ந்து ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 53% -ஐ எட்டும். மே மாத ஏஐசிபிஐ குறியீடு 139 ஐ எட்டியுள்ளது. இதில் 0.5 அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலான கணக்கீட்டில் அகவிலைப்படி 52.91% -ஐ எட்டியுள்ளது. இது 53 சதவீதமாக கணக்கிடப்படும். 

7 /10

இன்னும் ஜூன் மாத தரவு வர வேண்டி உள்ளது. கணக்கீடுகளின் படி இந்த மாதத்திலும் 0.5 அதிகரிப்பு இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அப்படி இருந்தால் அதற்கேற்றபடியாக அகவிலைப்படி மொத்த அதிகரிப்பும் தீர்மானிக்கப்படும்.. 

8 /10

சமீப காலங்களில் அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆகுமா என்று கேள்வி இருந்தது. ஆனால், அகவிலைப்படி இப்போது பூஜ்ஜியம் ஆக்கப்படாது, தொடர்ந்து அதிகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை அடிப்படை ஆண்டு மாற்றப்பட்டதால் அகவிலைப்படி பூஜ்ஜியமாக்கப்பட்டது. இப்போது அடிப்படை ஆண்டை மாற்றுவதற்கான அவசியம் இல்லை. ஆகையால் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 50 சதவீதத்தை தாண்டி செல்லும் என்று கூறப்படுகிறது.

9 /10

அகவிலைப்படியில் அதிரடியான ஏற்றும் இருக்காது என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். சொல்லப்போனால், பொதுவான கணிப்புடன் ஒப்பிடுகையில் டிஏ ஒரு சதவீதம் குறையக்கூடும் என்று கூறப்படுகிறது. ஜூலை மாத அகவிலைப்படி அதிகரிப்பு மூன்று சதவீதமாக இருக்கலாம் என்று அனுமாணிக்கப்படுகின்றது. அதாவது ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 53 சதவீதமாக அதிகரிக்கப்படலாம். குறியீட்டு எங்களின் அடிப்படையில் தற்போது அகவிலைப்படி 52.91 சதவீதமாக உள்ளது. ஜூன் மாதத்தில் இந்த குறியீடு புள்ளிகள் 0.5 அதிகரித்தாலும் அகவிலைப்படி 53.28 சதவீதமாக தான் அதிகரிக்கும். அப்பொழுதும் அகவிலைப்படி 53 சதவீதமாகவே கணக்கிடப்படும்.

10 /10

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி அரியர் தொகைக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.