மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் அட்டகாசம்: டிஏ ஹைக், டிஏ அரியர், சம்பள உயர்வு

7th Pay Commission: ஜூலை 2024-க்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. இது குறித்த கணக்கீடுகளுடன் அரசு தயாராகி வருகின்றது. 

7th Pay Commission: சமீபத்தில் ஜூன் 2024 -க்கான ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் வெளியிடப்பட்டன. இதன் அடிப்படையில் டிஏ ஹைக் குறித்த தெளிவு கிடைத்துள்ளது. டிசம்பர் 2023 முதல் ஜூன் 2024 வரை, CPI-IW 2.6 புள்ளிகள் உயர்ந்துள்ளது. இது 138.8 இல் இருந்து 141.4 ஆக ஏற்றம் கண்டுள்ளது. இதன் விளைவாக, அகவிலைப்படி உயர்வின் சதவீதம் 50.28% இல் இருந்து 53.36% ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 2024-க்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு செப்டம்பர் மாதத்தில் வந்தாலும், ஜூலை முதல் ஊழியர்கள் டிஏ உயர்வுக்கான டிஏ அரியர் தொகையை பெறுவார்கள். இதனால் செப்டம்பர் மாத சம்பளத்தில் பம்பர் ஏற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

1 /12

நீங்கள் மத்திய அரசு ஊழியரா? உங்கள் வீட்டில் யாரேனும் மத்தியப் பணிகளில் உள்ளார்களா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட நாள் காத்திருப்பு விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. அதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.   

2 /12

ஜூலை 2024-க்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. இது குறித்த கணக்கீடுகளுடன் அரசு தயாராகி வருகின்றது. அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய சமீபத்திய தகவல்கள், அறிவிப்பு தேதி, டிஏ அரியர் தொகை ஆகியவற்றை பற்றிய சமீபத்திய புதுப்பிபுகளை இந்த பதிவில் காணலாம். 

3 /12

ஜவனரி 2024 முதல் ஜூலை 2024 வரை வெளிவந்துள்ள ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் அடிப்படையில் இந்த முறை அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவை 3% அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. இதன் பின்னர் ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் (Pensioners) அகவிலை நிவாரணம் 53% ஆக அதிகரிக்கும்.

4 /12

சமீபத்தில் ஜூன் 2024 -க்கான ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் வெளியிடப்பட்டன. இதன் அடிப்படையில் டிஏ ஹைக் குறித்த தெளிவு கிடைத்துள்ளது. டிசம்பர் 2023 முதல் ஜூன் 2024 வரை, CPI-IW 2.6 புள்ளிகள் உயர்ந்துள்ளது. இது 138.8 இல் இருந்து 141.4 ஆக ஏற்றம் கண்டுள்ளது. இதன் விளைவாக, அகவிலைப்படி உயர்வின் சதவீதம் 50.28% இல் இருந்து 53.36% ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

5 /12

மத்திய அரசு, ஊழியர்களின் அகவிலைப்படியை ஆண்டுக்கு இருமுறை உயர்த்துகிறது. ஜனவரி மற்றும் ஜூலை மாதங்கள் முதல் திருத்தங்கள் அமல்படுத்தப்படுகின்றன. ஜனவரி மாத அகவிலைப்படி முந்தைய ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையிலும், ஜூலை மாத அகவிலைப்படி ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் (AICPI Index) அடிப்படையிலும் தீர்மானிக்கப்படுகின்றது.

6 /12

ஜனவரி 2024 -இல் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர்களது மொத்த டிஏ (DA) 50% ஆக உயர்ந்தது. இதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் வந்தது. ஜூலை 2024 -க்கான டிஏ உயர்வு (DA Hike) அறிவிப்பு செப்டம்பர் மாதம் வரும் என கூறப்படுகின்றது. எனினும், இது குறித்து அரசு எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இன்னும் வெளியிடவில்லை.

7 /12

அகவிலைபப்டி 3% அதிகரித்தால் ஊழியர்களுக்கு நல்ல ஊதிய உயர்வு இருக்கும். இதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம். ஒரு மத்திய அரசு ஊழியரின் அடிப்படை ஊதியம் ரூ.18,000 என வைத்துக்கொள்வோம். ஜூலை மாத திருத்தத்திற்குப் பிறகு, 3% டிஏ உயர்வால் அவரது மொத்த சம்பளம் ரூ 540 அதிகரிக்கும். இந்த அதிகரிப்பு மூலம் ஊழியருக்கு ஆண்டுக்கு ரூ.6,480 கூடுதல் வருமானம் கிடைக்கும். ரூ 56,900 அடிப்படை சம்பளம் பெறும் பணியாளர்களுக்கு டிஏ உயர்வு (DA Hike) மூலம் மாத சம்பளம் ரூ.1,707, ஆண்டு சம்பளம் ரூ.20,484 என்ற அளவில் உயரும்.

8 /12

ஜூலை 2024-க்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு செப்டம்பர் மாதத்தில் வந்தாலும், ஜூலை முதல் ஊழியர்கள் டிஏ உயர்வுக்கான டிஏ அரியர் தொகையை பெறுவார்கள். இதனால் செப்டம்பர் மாத சம்பளத்தில் பம்பர் ஏற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

9 /12

நாளுக்கு நாள் அதிககரிக்கும் விலைவாசியை சமாளிக்கவும், பணவீக்கத்தின் பாதிப்பை ஈடுகட்டவும், மத்திய அரசு தனது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை வழங்குகிறது. இது ஆண்டுக்கு 2 முறை திருத்தப்படுகின்றது. பணவீக்கம், அரசின் பொருளாதார நிலை, தொழிலாளர் அமைச்சகம் வெளியிடும் தரவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த திருத்தங்கள் ஏற்படுகின்றன. 

10 /12

மத்திய அரசு ஊழியர்களுக்கு: டிஏ% = [(கடந்த 12 மாதங்களில் AICPI இன் சராசரி (2001 அடிப்படை ஆண்டு = 100)  – 115.76)/115.76] x 100 / பொதுத்துறை ஊழியர்களுக்கு: டிஏ% = [(கடந்த 3 மாதங்களில் AICPI இன் சராசரி (அடிப்படை ஆண்டு 2001 = 100) – 126.33)/126.33] x 100.

11 /12

இதற்கிடையில் 8வது ஊதியக் குழு பற்றியும் அதிகமாக பேசப்பட்டு வருகின்றது. பொதுவாக பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. 7வது ஊதியக் குழு 2016 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. அந்த வகையில், 8வது ஊதியக்குழு 2026 -இல் அமைக்கப்பட வேண்டும். இது அமலுக்கு வந்தால் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய திருத்தம் ஏற்பட்டு மிகப்பெரிய சம்பள உயர்வு கிடைக்கும்.

12 /12

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.