7th Pay Commission, HRA அதிகரிப்பால் ஊழியர்களுக்கு கூடுதல் நன்மைகள்: நிபுணர்கள்

7th Pay Commission Latest News: ஜூலை 1 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 28% அகவிலைப்படி கிடைக்கும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துவிட்டது. அதாவது ஆகஸ்ட் முதல் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கும். 

இது மட்டுமல்லாமல், அரசாங்கம் ஊழியர்களின் எச்.ஆர்.ஏ-வையும்  அதிகரித்துள்ளது. ஆகையால், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாத சம்பளம் இரட்டை பொனான்சாவாக இருக்கும்.

1 /5

11% அகவிலைப்படி உயர்த்தப்பட்டு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 28 சதவிகிதமாக அதிகரித்தது. ஜூலை 1 முதல் இந்த மாற்றம் நடைமுறைக்கு வரும். தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான மற்றொரு பம்பர் செய்தியை மத்திய அரசு அறிவித்துள்ளது.  

2 /5

நரேந்திர மோடி தலைமையிலான அரசு மத்திய அரசு ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவில் (HRA) உயர்வை அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஊழியர்கள் திருத்தப்பட்ட விகிதங்களின்படி, அடுத்த மாதத்திலிருந்து, அதாவது ஆகஸ்ட் 2021 முதல் அதிகரித்த HRA-ஐப் பெறுவார்கள்.

3 /5

இதன் மூலம், அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் ஆகியவை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. ஊழியர்களின் அகவிலைப்படி 25 சதவீதத்தை தாண்டியுள்ளதால் HRA உயர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

4 /5

அரசாங்கத்தின் உத்தரவின்படி, மத்திய அரசு ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) பின்வரும் முறையில் கணக்கிடப்படும். ‘X’ வகை நகரங்களில் வசிப்பவர்களுக்கு இந்த உயர்வு 27 சதவீதமாக இருக்கும். இதேபோல், ‘Y’ மற்றும் ‘Z’ பிரிவுகளில் வசிப்பவர்களுக்கு முறையே 18 சதவீதம் மற்றும் 9 சதவீதம் உயர்வு இருக்கும். X, Y, மற்றும் Z வகை நகரங்கள்  50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்கள் X வகை நகரங்களாகும். Y மற்றும் Z வகை நகரங்கள் முறையே 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை மற்றும் ஐந்து லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நகரங்களாகும்.  

5 /5

அகவிலைப்படி தற்போது 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. டிஏ 50 சதவீதத்தை கடக்கும்போது, HRA விகிதங்களும் முறையே 30%, 20% மற்றும் 10% ஆக திருத்தப்படும். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை சுமார் 48.34 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும் 65.26 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பயனளிக்கும். அகவிலைப்படி, அகவிலை நிவாரணம் மற்றும் எச்.ஆர்.ஏ ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பால், ஊழியர்களின் ஊதியத்தில் பெரிய அளவிலான உயர்வு இருக்கும்.