7 Things To Keep Private In Life : நாம் சில விஷயங்களை பிறரிடம் கூறாமல் மனதிற்குள் வைத்துக்கொள்வது நல்லது. அப்படி வைத்துக்கொள்ள வேண்டியவை என்ன தெரியுமா?
7 Things To Keep Private In Life : நம்மில் பலருக்கு வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், நம் ஓட்டை வாயை வைத்துக்கொண்டு கொஞ்சம் ஓவராக பேசுவதால் பல விஷயங்களில் நமக்கு சறுக்கல் ஏற்படலாம். அப்படி ஆகாமல் இருக்க, நாம் சில விஷயங்களை நம் மனதிற்குள்ளேயே வைத்துக்கொள்ள வேண்டியது நல்லது. அப்படி வைத்துக்கொள்ள வேண்டியது என்னென்ன தெரியுமா?
உங்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விஷயங்களை யாரிடமும் கூற வேண்டாம். அதிகமாக எதையேன்ம் கூறினால், ஒருவர் உங்களது குணாதிசயத்தை ஜட்ஜ் செய்ய வாய்ப்புள்ளது.
வாழ்வில் வெற்றி பெற்றவர்கள், தங்களின் நிதி நிலை குறித்து பெரும்பாலும் வெளியில் பேசாதவர்களாக இருப்பார்கள். அது, அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாக இருக்கும்.
நீங்கள் உங்கள் எதிர்காலம் குறித்து என்ன திட்டங்கள் வைத்துள்ளீர்கள், உங்கள் கனவு என்ன என்பது குறித்து யாரிடமும் சொல்லாமல் சைலண்டாக வேலை பார்க்க வேண்டும்.
உங்களுக்கு தனிப்பட்ட வாழ்வில் என்ன பிரச்சனை இருக்கிறது என்பதை யாரிடமும் கூற வேண்டாம்.
அனைவருக்கும் ஒவ்வொரு வித்தியாசமான கருத்துகள் இருக்கும். அந்த கருத்துகள், அனைவர் காதுகளுக்கும் சென்றடைய வேண்டும் என்கிற அவசியம் இல்லை.
நீங்கள் செய்யும் நல்ல விஷயங்களை நாலு பேரிடம் கூற வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அப்படி கூறினால் நீங்கள் விளம்பரம் தேடுகிறீர்கள் என சிலர் நினைத்துக்கொள்வர்.
உங்களுக்கு தன்னம்பிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால், அதை பிறரிடம் கூற வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இது, உங்களை பற்றி நீங்களே குறைத்து கூறுவது போல மாறிவிடும்.