வாட்ஸ்அப்பில் அறிமுகமாகி உள்ள அசத்தலான 5 அம்சங்கள்!

வாட்ஸ் அப்பில் இனி மெசஜ்களுக்கு எமோஜிகள் மூலம் பதிலளிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. 

 

1 /5

வாட்ஸ்அப் அதன் பயனர்களை கம்யூனிட்டிகளை உருவாக்க அனுமதிக்கிறது.  இதன் மூலம் பள்ளிகள், குடியிருப்பு சங்கங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள நண்பர்கள் போன்றவற்றை ஒருங்கிணைக்கலாம்.  

2 /5

வாட்ஸ்அப் குழு அட்மின்கள் எந்த நேரத்திலும் எந்த உறுப்பினர்களின் செய்திகளையும் நீக்க முடியும்.   ஒருமுறை நீக்கப்பட்டால், அந்த செய்தியை எந்த குழு உறுப்பினர்களாலும் பார்க்க முடியாது.   

3 /5

வாட்ஸ்அப்பில் இனி ஒரே நேரத்தில் 32 நபர்களுடன் வாய்ஸ் அழைப்புகள் மேற்கொள்ளலாம்.  தற்போதுள்ள அம்சத்தின்படி சமூக வலைத்தளத்தில், அதிகபட்சமாக ஐந்து பேர் மட்டுமே வீடியோ அழைப்பில் சேர முடியும்.  

4 /5

இனிமேல் பயனர்கள் வாட்ஸ்அப்பில் 2ஜிபி அளவுள்ள ஃபைல்களை ஒருவருக்கு அனுப்பமுடியும்.  இதுவரை 1ஜிபி அளவுள்ள ஃபைல்களை மட்டும் அனுப்பும் இலையில் இந்த சிறப்பான அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.   

5 /5

வாட்ஸ் அப்பில் இனி மெசேஜ்களுக்கு பதிலளிக்காமல் எமோஜிகள் மூலம் பதிலளிக்கலாம்.  மெஸஞ்சரில் இவ்வாறு மெசேஜ்களுக்கு எமோஜிகள் மூலம் பதிலளிக்கும் அம்சம் இருந்த நிலையில் தற்போது வாட்ஸ் அப்பிலும் வந்துள்ளது.