மளிகை பொருட்களை விரைவாக டெலிவரி செய்யும் 5 நிறுவனங்கள்

பிக்பாஸ்கெட் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு 10 முதல் 20 நிமிடங்களில் மளிகை பொருட்களை வேகமாக டெலிவரி செய்யும் என்று உறுதியளித்து இருக்கிறது.

 

 

1 /5

டன்ஸோ : டன்ஸோ நிறுவனமானது அருகிலுள்ள கடைகளில் இருந்து மளிகை பொருட்களை உடனடியாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பிரபலமான ஒன்றாக செயல்பட்டு  வருகிறது.  இந்த நிறுவனமானது மற்ற சேவையாக உணவு பொருட்களையும் டெலிவரி செய்கிறது.

2 /5

பிளிங்கிட் : பிளிங்கிட் நிறுவனம் முன்னர் குரோஃபர்ஸ் என்று அழைக்கப்பட்டது, மேலும் 10 நிமிட டெலிவரியை அறிமுகம் செய்த நிறுவனம் என்கிற பெருமையை இதுவே பெரும்.  மேலும் விரைவான டெலிவரியால் அதிக இதன் பணியாளர்கள் அதிக ஆபத்தில் சிக்குகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

3 /5

செப்டோ : சமீபத்தில் வந்த டெலிவரி சேவை தான் இந்த செப்டோ.  இது மற்ற நிறுவனங்கள் போல் விரைவாக மளிகை பொருட்களை டெலிவரி செய்வோம் என்று உத்திரவாதம் அளித்து சில மாதங்களிலேயே அதனை நிகழ்த்தியது.

4 /5

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் : ஸ்விக்கி செயலியில் உள்ள ஒரு அம்சம் தான் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ஆகும்.  இது டெலிவரி செய்யும் இடங்களை பொறுத்து 10 முதல் 20 நிமிடங்களுக்குள் மளிகை பொருட்களை டெலிவரி செய்து விடுகிறது.

5 /5

பிக்பாஸ்கெட் : அதிவிரைவாக பொருட்களை டெலிவரி செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் இணைந்துள்ள புதிய நிறுவனம் பிக்பாஸ்கெட் ஆகும்.  இந்நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை வேகமாக வழங்கும் நோக்கில் நெட்வொர்க்கை மேம்படுத்தியுள்ளது.