பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை பாதுகாப்பு துறையில் இருந்து நீதி துறைக்கு மாற்றிவிடலாம் என P சிதம்பரம் அவர்கள் தெரிவித்துள்ளார்!
இன்று முன்னதாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், முன்னாள் நிதியமைச்சர் P சிதம்பரம் அவர்களின் குடும்பத்தார் மீது உள்ள வருமான வரி குற்றச்சாட்டுகளை சுட்டிக் காட்டினார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் சிதம்பரம் அவர்கள், நிர்மலா சீதாராமன் அவர்களிடன் இருந்து பாதுகாப்பு துறையினை திரும்பப் பெற்றுவிட்டு நீதி துறையினை கொடுத்துவிடலாம் என பதிலடி கொடுத்துள்ளார்.
The buzz in Delhi is that Ms Nirmala Sitaraman will be removed as Defence Minister and appointed as lawyer of the Income-tax department. Welcome to the bar, Ms Sitaraman.
— P. Chidambaram (@PChidambaram_IN) May 13, 2018
முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்ததாவது...
முன்னாள் நிதியமைச்சர் P சிதம்பரத்தின் குடும்பத்தினர் 14 நாடுகளில் உள்ள 21 வங்கிகளில் சட்டவிரோதமாக பணத்தைப் பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறை குற்றம் சாட்டியிருப்பதைச் சுட்டிக் காட்டினார்.
P சிதம்பரத்தின் மீதான இக்குற்றச்சாட்டினை குறித்து விசாரிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தயாரா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Former Finance Minister P. Chidambaram’s family has been booked under Black Money Act for illegal assets in several countries and for operating illegal foreign bank accounts: Smt @nsitharaman https://t.co/Szq6TL6oRk #BlackMoneyOfPC pic.twitter.com/fKjh1EQVXH
— BJP (@BJP4India) May 13, 2018
முன்னதாக நேற்று முன்தினம் பாக்கிஸ்தான் நவாஸ் ஷெரீப் அவர்கள் 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாக்கிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்தார். இந்த சம்பவத்தின் மூலம் இந்தியாவின் நிலைப்பாடு உறுதிப்படுத்தப் பட்டிருப்பதாகவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்!