மின்சாரத்தால் வாகனங்களுக்கு பச்சை வண்ணத்தில் நம்பர் பிளேட்!

மின்சாரத்தால் இயக்கப்படும் வாகனங்களுக்கு பச்சை வண்ணத்தில் நம்பர் பிளேட் வழங்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது!

Last Updated : May 10, 2018, 06:30 PM IST
மின்சாரத்தால் வாகனங்களுக்கு பச்சை வண்ணத்தில் நம்பர் பிளேட்! title=

மின்சாரத்தால் இயக்கப்படும் வாகனங்களுக்கு பச்சை வண்ணத்தில் நம்பர் பிளேட் வழங்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது!

நாடு முழுவதும் இயங்கும் மின்சார வாகனங்களுக்கு பச்சை வண்ணத்தில் நம்பர் பலகை வழங்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மாசு கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவிக்க முடிவு செய்துள்ளது.

இதற்காக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை அடையாளம் காண்பதற்காக, பச்சை வண்ணத்தில் நம்பர் பிளேட்டுகள் பொருத்த மத்திய நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டது. அதன்படி, தனியாரின் மின்சாரத்தில இயங்கும் வாகனங்களுக்கு பச்சை வண்ண பலகையில் வெள்ளை நிற எண்கள் பொறிக்கப்பட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேப்போல் மின்சாரத்தில் இயங்கும் வாடகை வாகனங்களுக்கு பச்சை வண்ண நம்பர் பலகையில் மஞ்சள் வண்ண எண்கள் இடம்பெறும் வகையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

அதன்படி மின்சாரத்தில் இயங்கும் வாகன நம்பர் பலகையின் வண்ணத்தை மாற்றும் திட்டத்துக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதாக மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Trending News