UAE: தவற விட்ட பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டால் 2 ஆண்டுகள் சிறை!

ஐக்கிய அரபு அமீரக சட்டம் பொதுவாகவே மிக கடினமானவை. மிகவும் உறுதியாக அமல்படுத்தப்படுபவை. இந்நிலையில் பொதுவெளியில் கிடக்கும் தவற விட்டபொருட்களை வைத்திருந்தால் கடும் தண்டனை விதிக்கப்படும் என ஐக்கிய அரபு அமீரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 25, 2022, 06:18 PM IST
  • பொதுவெளியில் கிடக்கும் தவற விட்டபொருட்களை வைத்திருந்தால் கடும் தண்டனை.
  • ஐக்கிய அரபு அமீரக அரசின் சட்ட துறை மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை.
  • வேறொருவருக்கு சொந்தமான பொருளை சொந்த பொருளைப் போல் பயன்படுத்தக் கூடாது.
UAE: தவற விட்ட பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டால் 2 ஆண்டுகள் சிறை! title=

ஐக்கிய அரபு அமீரக சட்டம் பொதுவாகவே மிக கடினமானவை. மிகவும் உறுதியாக அமல்படுத்தப்படுபவை. இந்நிலையில் தற்போது, பொதுவெளியில் தவறவிட்ட பொருட்கள் தொடர்பான ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தவற விட்ட பொருட்கள் அல்லது பணத்தை எடுத்தவர்கள் 48 மணி நேரத்திற்குள் காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என ஐக்கிய அரபு அமீரக சட்டம் கூறுகிறது. பொதுவெளியில் கிடக்கும் தவற விட்டபொருட்களை வைத்திருந்தால் கடும் தண்டனை விதிக்கப்படும் என ஐக்கிய அரபு அமீரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து ஐக்கிய அரபு அமீரக அரசின் சட்ட துறை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தவற விட்ட பொருட்களை உரியவரிடம் சேர்க்காமல் வைத்துக் கொண்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

பொது வெளியில், தவறுதலாக விடப்பட்ட பொருட்களை கண்டெடுத்தால், அதனை இரண்டு நாட்களுக்குள் அதாவது 48 மணி நேரத்திற்குள் காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். அத்தகைய பொருட்களை வைத்திருந்தால் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். வேறொருவருக்கு உரிமையான பொருட்களை எடுத்துச் செல்வோருக்கு 20,000 திர்ஹாம் அபராதம், அதாவது நான்கு லட்சம் இந்திய ரூபாய்க்கு மேல் அபராதமும், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.

மேலும் படிக்க | NRI News: கனடா நாட்டின் திறமைக்கான ஆதாரமாக மாறி வரும் இந்தியா!

2021 ஆம் ஆண்டின் அரசாணை சட்டம் 31 இன் பிரிவு 454 கீழ் படி தண்டனை விதிக்கப்படும். அதன்படி, வேறொருவர் தவற விட்ட பொருளை சொந்தச் சொத்தைப் போல் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் கிரிமினல் வழக்கு தொடரும் என சட்டம் கூறுகிறது. இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சமூக வலைதளங்களிலும் பிரச்சாரமும் தொடங்கப்பட்டுள்ளது. சட்டத்தின்படி, காணாமல் போன அல்லது கைவிடப்பட்ட சொத்தை யாரேனும் கண்டறிந்தால், 48 மணி நேரத்திற்குள் அந்த சொத்து அல்லது பணத்தை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அத்தகைய செயலை மீறுவது குற்றவியல் நடவடிக்கைக்கு உட்பட்டது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ஆயிரத்தை கோடிகளாக்கிய இந்தியாவின் Warren Buffet கடைபிடித்த 5 முதலீட்டு டிப்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News