TELO: இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தச்சட்டத் திருத்தம் எப்போது?

TELO On Samashti System: அரசியலமைப்பின் 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் சமஸ்டி முறை நோக்கி செல்லுவது சாத்தியமற்றது என தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 23, 2023, 03:45 PM IST
  • இலங்கையில் கூட்டாட்சி சாத்தியமில்லையா?
  • இலங்கையில் கூட்டாட்சி பற்றி டெலோ கருத்து
  • இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தச்சட்டத் திருத்தம் எப்போது?
TELO: இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தச்சட்டத் திருத்தம் எப்போது? title=

யாழ்பாணம்: அரசியலமைப்பின் 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் சமஸ்டி முறை நோக்கி செல்லுவது சாத்தியமற்றது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட குருசாமி சுரேந்திரன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் கருத்து என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இலங்கையில், 13 வது அரசியல் திருத்தம் எங்களுடைய தீர்வல்ல என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம். ஆனால் 13 வது அரசியலமைப்பு யாப்பில் இருக்கும் அதிகாரங்களை நடைமுறைப்படுத்தாமல் அதைத் தாண்டிய சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை நோக்கி நாங்கள் நகர்வது என்பது சாத்தியமற்ற ஒன்று என குறிப்பிட்டார்.

சமஸ்டி முறை
பலதரப்பட்ட அரசியல் சமூகங்களை ஒன்றிணைத்து, ஒரு பொது அரச கட்டமைப்பில் அச்சமூகங்களின் பொதுத் தேவைகளை நிறைவு செய்வதற்காக உருவாக்கப்படும் அரசாட்சி முறைக்கு சமஸ்டி முறை என்றும் சொல்வார்கள். கூட்டாட்சி முறையில் அமைக்கப்படும் கூட்டரசை இலங்கையில் சமஸ்டி என்று அழைக்கின்றனர்.

மேலும் படிக்க | கூகுள் நிறுவனத்தில் ஆட்குறைப்பு தொடருமா? அதிர வைக்கும் PERM கிரீன் கார்டு அப்டேட்

கூட்டாட்சியில் பொதுத் தேவைகளுக்காக ஒரு பொது அரச கட்டமைப்பும், அந்த கூட்டமைப்பில் சேர்ந்துள்ள தனித்துவ அரசியல் சமூகங்களுக்காக உள்ளூர் அல்லது மாகாண அல்லது மாநில அரச கட்டமைப்புக்களும் இருக்கும். கூட்டரசு உருவாக்கப்படும்பொழுது ஏற்றுக்கொள்ளப்படும் அரசியலமைப்பு சட்டம் ஆகும்.

இது, மத்திய அரசுக்கும், மாகாண அல்லது மாநில அரசுகளுக்கும் இடையே இருக்கும் உறவுகளையும், கடமைகளையும், உரிமைகளையும் தெளிவாக வரையறுக்கும். இந்த இரண்டு அம்சங்களுக்கிடையான சட்ட ஆக்க அதிகாரப் பங்கீடுகளையும் விபரிக்கும் அரசியலமைப்புச் சட்டம் என்பது குறிப்பிடத்தகக்து. இந்தியா, கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் கூட்டாட்சி அரசுகளுக்கு எடுத்துக்காட்டுக்கள் ஆகும்.

தமிழீழ விடுதலை இயக்கம் என்பது, இலங்கைத் தமிழ் அமைப்பும், அரசியல் கட்சியும் ஆகும். இது இலங்கையின் வடக்கு, மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுதந்திரத் தமிழீழம் அமைக்கும் நோக்கோடு சிறீ சபாரத்தினம், நடராஜா தங்கதுரை, குட்டிமணி ஆகியோரால் 1986 இல் நிறுவப்பட்டது.

மேலும் படிக்க | சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு உருவாகும் திரிகிரஹி யோகம்! யாருக்கு பாதிப்பு? யாருக்கு சுபம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News