பேச்சுவார்த்தைக்கான இலங்கை அரசின் அழைப்பை நிராகரிக்கும் போராட்டக்காரர்கள்

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில், போராட்டக் குழுவினரின் பிரதிநிதிகளை சந்தித்து பேசத் தயார் என்று இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 15, 2022, 09:21 AM IST
  • பேச்சுவார்த்தைக்காக அழைப்பு விடுத்த இலங்கை அரசு
  • அரசின் அழைப்பை நிராகரிக்கும் போராட்டக்காரர்கள்
  • இலங்கையில் வலுக்கும் போராட்டங்கள்
பேச்சுவார்த்தைக்கான இலங்கை அரசின் அழைப்பை நிராகரிக்கும் போராட்டக்காரர்கள் title=

கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில், போராட்டக் குழுவினரின் பிரதிநிதிகளை சந்தித்து பேசத் தயார் என்று இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். 

இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, மக்களின் அடிப்படை தேவைகள் கூட பூர்த்தி செய்ய முடியாத அளவு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

விலை வாசி உயர்வு மற்றும் உணவுப் பொருள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கைவாழ் மக்கள், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். பொருளாதார நெருக் கடிக்கு காரணமான, அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் பதவி விலக வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | இந்தியாவுக்கு இலங்கை சொல்லும் ‘ரகசியம்’ என்ன ?

இருந்தபோதிலும் இலங்கை அதிபர் பதவி விலமாட்டார் என்று இலங்கை நாடாளுமன்றத்தில் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டதையடுத்து, போராட்டக்காரர்கள் அதிபர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போராட்டக்காரர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மகிந்த ராஜபக்ச தயாராக இருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது. 

பேச்சுவார்த்தைக்கு இலங்கை பிரதமர் அழைப்பு விடுத்துள்ள நிலையில், பிரதமருக்கு போராட்டக்காரர்கள் வழங்கிய பதில் நிலைமை இன்னும் மோசமாகலாம் என்பதை குறிப்பாக உணர்த்துகிறது. 

world

மக்கள் போராட்டத்தின் அடிப்படை கோரிக்கைகள் என்ன?
அதிபரும் பிரதமரும் பதவி விலக வேண்டும் என்பது இலங்கையில் (Srilanka) நடைபெறும் போராட்டத்தின் முதல் கோரிக்கையாகவும், ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருக்கும் நாடாளுமன்றத்தில் ஆசனம் வழங்கக் கூடாது என்பது பிரதான கோரிக்கையாகவும் உள்ளது.

அத்தியாவசிய சேவைகள், நெருக்கடியில் உள்ள விசேட பகுதிகள் (சுகாதாரம், கல்வி போன்றவை...) மறுசீரமைப்பதற்காக 19வது திருத்தத்தை மீண்டும் அமுல்படுத்தி 06 மாதங்களுக்கு இடைக்கால அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோருகின்றனர். 

நாட்டில் திருடப்பட்ட பணம் மற்றும் அனைத்து சொத்துக்களையும் மீட்பதற்காக ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள ஊழல் அரசியல்வாதிகள், மற்றும் அதிகாரிகள் உட்பட ராஜபக்ச குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எதிராக இடைக்கால அரசாங்கம் அமைக்கவேண்டும் என்றும், இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

world
அடுத்த 6 மாதங்களுக்குள் இலங்கையில் நாடாளுமன்ற தேர்தலையும் அதிபர் தேர்தலையும் நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது உட்பட தங்களது கோரிக்கைகள் வெற்றி பெறும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அரசின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பு, போராட்டத்தின் வெற்றி என்று, இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளதாக 'தமிழன்' என்ற செய்தி இணையதளம் கூறுகிறது.

நேற்று தமிழர்கள் மற்றும் சிங்களவர்கள் புத்தாண்டு பிறப்பை கொண்டாடிய நிலையிலும் இலங்கையில் மக்களின் போராட்டம் தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | இலங்கையில் அவசர நிலை பிரகடனம், அதிபர் முக்கிய அறிவிப்பு

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News