இலங்கையில் பறை இசை போராட்டம்; ராஜபக்ச அரசு பதவி விலக வலியுறுத்தல்

இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், பொருட்களின் தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும் கொழும்பில் தமிழ் இளைஞர்கள், யுவதிகள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 25, 2022, 01:24 PM IST
இலங்கையில் பறை இசை போராட்டம்; ராஜபக்ச அரசு பதவி விலக வலியுறுத்தல் title=

தமிழர்களின் பாரம்பரிய பறை இசை கருவியை வாசித்து ஒப்பாரி வைத்து போராட்டங்களை முன்னெடுத்து, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் பாரம்பரிய பறை இசை வாசித்து இளைஞர், யுவதிகள் போராட்டம்  நடத்துகின்றனர். 

போராட்டம் தீவிரம் அடையும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ள நிலையில், ராஜபக்ச ஒழிய வேண்டும். சிறைக்கு செல்ல வேண்டும் என  இளைஞர்கள் பேட்டி அளித்துள்ளனர். 

கொழும்பு செட்டியார் தெரு பிள்ளையார் ஆலய வாளகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணி இலங்கை அதிபர் மாளிகை வரை சென்று அங்கு பறை இசை வாசித்து போராட்டத்தை முன்னெடுத்தனர். தமது கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால், போராட்டம் தீவிரம் அடையும் என எச்சரிக்கையும் விடுத்தனர். 
 
மேலும் படிக்க | Sri Lanka Crisis: இலங்கைக்கு 50 கோடி டாலர் கூடுதல் கடன் வழங்க இந்தியா ஒப்புதல்

போராட்டத்தின்போது, எதிர்ப்பு பதாதைகள் காட்சிபடுத்தியவாறு, அரசு வீடு செல்ல வேண்டும் என முழக்கங்களும் எழுப்பட்டது. போராட்டத்தின் போது இரண்டு இளைஞர்கள் எமக்கு பேட்டியளித்தனர்.

இலங்கை நெருக்கடிக்கு காரணமான ராஜபக்ச ஒழிய வேண்டும், சிறைக்கு செல்ல வேண்டும். கொள்ளை அடித்த பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும், இந்த அரசாங்கம் வேண்டாம், பொருட்களின் விலை அதிகம், எந்த விதமான அத்தியவசியமான பொருட்கள் எதுவும் இல்லை, நாடு பின்நோக்கி செல்கின்றது என இளைஞர்கள் தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தினர்.

1948ம் ஆண்டு பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து இலங்கை முன்பு எப்போதும் இல்லாத பொருளாதாரக் சிக்கலை சந்தித்து வருகிறது. அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் நெருக்கடி நிலை ஏற்பட்டு, அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் எரிபொருளின் இறக்குமதிக்கு பணம் செலுத்த முடியாமல் போனதால், கடுமையான தட்டுப்பாடு நிலகிறது. எனவே, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருளின் விலை விண்ணை தொட்டுள்ளது.

மேலும் படிக்க | Srilanka Crisis: வரும் நாட்களில் வரிகள் மேலும் உயரும்; இலங்கை நிதி அமைச்சர் கொடுக்கும் அதிர்ச்சி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News