ICICI Bank: இங்கிலாந்தில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கான ஒரு சிறப்புவாய்ந்த வங்கிக்கணக்கு

Indian Students in UK: ஐசிஐசி வங்கியின் துணை நிறுவனமான ICICI Bank UK, பிரிட்டனில் உயர்கல்வி படிக்கச்செல்லும் இந்திய மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட புதிய கணக்கைப் பற்றி  திங்கள்கிழமை அறிவித்தது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 4, 2022, 05:37 PM IST
  • இங்கிலாந்து கல்வி நிறுவனங்களில் படிக்க அதிக விசாக்கள் வழங்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியர்கள் சீனாவை முந்தியுள்ளனர்.
  • 118,000 இந்திய மாணவர்கள் ஜூன் 2022 இல் முடிவடைந்த ஆண்டிற்கான மாணவர் விசாவைப் பெற்றுள்ளனர்.
  • இது முந்தைய ஆண்டை விட 89 சதவீதம் அதிகமாகும்.
ICICI Bank: இங்கிலாந்தில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கான ஒரு சிறப்புவாய்ந்த வங்கிக்கணக்கு title=

வதோதராவைத் தலைமையிடமாகக் கொண்ட ஐசிஐசி வங்கியின் துணை நிறுவனமான ICICI Bank UK, பிரிட்டனில் உயர்கல்வி படிக்கச்செல்லும் இந்திய மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட புதிய கணக்கைப் பற்றி  திங்கள்கிழமை அறிவித்தது. ஹோம்வாண்டேஜ் கரண்ட் அகவுண்ட் (HVCA), உலகில் எங்கும் பயன்படுத்த செல்லுபடியாகும் விசா டெபிட் கார்டுடன் கிடைக்கும். இதை மாணவர்கள் இந்தியாவை விட்டு இங்கிலாந்துக்கு செல்வதற்கு முன்பு டிஜிட்டல் முறையில் செயல்படுத்திக்கொள்ளாலாம், அதாவது ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். 

இந்தியாவில் சேமிப்புக் கணக்கிற்குச் சமமாக, கணக்கு ஆக்டிவேட் செய்யப்பட்ட உடன், கணக்கு வைத்திருப்பவர் இணைய வங்கி மற்றும் மொபைல் வங்கிச் சேவையை செயல்படுத்த முடியும்.

மாணவர்கள் டெபிட் கார்டுகளை பெற்றுக்கொள்ள இந்திய அல்லது இங்கிலாந்து முகவரியை தேர்வு செய்யலாம்.

மேற்படிப்பு மற்றும் பிற பணிகளுக்காக இங்கிலாந்துக்கு வரும் மாணவர்களின் தனித்துவமான வங்கித் தேவைகளை தாங்கள் புரிந்துகொள்வதாகவும், அவர்களுக்கு வங்கிச் சேவையை சிரமமின்றி செய்ய முயற்சி செய்து வருவதாகவும் ICICI Bank UK plc இன் ரீடெயில் பேங்கிங்கின் தலைவர் கூறினார்.

"டிஜிட்டல் கணக்கு திறக்கும் வசதி, இந்திய மாணவர்கள் இந்தியாவில் இருக்கும்போதே UK வங்கிக் கணக்கில் சுலபமாகச் சேர உதவுகிறது. HomeVantage நடப்புக் கணக்கு மற்றும் விசா டெபிட் கார்டு ஆகியவை இங்கிலாந்தில் அவர்களின் அன்றாட வங்கித் தேவைகளைக் கவனித்துக்கொள்ள உதவுகின்றன" என அவர் மேலும் தெரிவித்தார். 

மேலும் படிக்க | Investment: இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பமா? NRIகளுக்கான இந்திய சட்டங்கள் இவை 

ஐசிஐசிஐ வங்கி யுகே, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தனிப்பட்ட, வணிக மற்றும் கார்ப்பரேட் வங்கி சேவைகள் மூலம் புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கு சேவை செய்வதற்கான பல முயற்சிகளை எடுத்து வருவதாகவும், அந்த முயற்சிகளில் இதுவும் ஒரு முக்கிய பங்கு எனவும் வங்கி கூறியுள்ளது. 

புதிய கணக்கை அதன் மொபைல் செயலி மூலமாகவோ அல்லது ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தின் மூலமாகவோ துவக்கலாம் என்றும் வங்கி தெரிவித்துள்ளது. 

ஜாயிண்ட் கணக்குகளுக்கு, மாணவர்கள் ஐசிஐசிஐ வங்கியின் கிளைகளில் ஏதேனும் ஒன்றுக்கு சென்று தேவையான விவரங்களை பெறலாம்.

ஆகஸ்டில் வெளியிடப்பட்ட யுகே உள்துறை அலுவலகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, இங்கிலாந்து கல்வி நிறுவனங்களில் படிக்க அதிக விசாக்கள் வழங்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியர்கள் சீனாவை முந்தியுள்ளனர்.

கிட்டத்தட்ட 118,000 இந்திய மாணவர்கள் ஜூன் 2022 இல் முடிவடைந்த ஆண்டிற்கான மாணவர் விசாவைப் பெற்றுள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 89 சதவீதம் அதிகமாகும்.

மேலும் படிக்க | NRI News:அமீரகத்தின் புதிய விசா விதிகளால் என்ஆர்ஐ-களுக்கு லாபம், விவரம் இதோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News