சிங்கப்பூரில் வசிக்கும் தமிழரா நீங்கள்? உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி

சிங்கப்பூரில் உள்ள வாகன ஓட்டிகளுக்கு முக்கிய செய்தி. வாகன உரிமை சான்றிதழ் கட்டணங்கள் அதிகரிக்கப்படுள்ளன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 8, 2022, 04:18 PM IST
  • சிங்கப்பூரில் சொகுசு கார்களுக்கான வாகன உரிமை சான்றிதழ் கட்டணங்கள் 100,000 வெள்ளியைத் தாண்டிச் சென்றுள்ளன.
  • பெரிய கார்களுக்குப் பயன்படுத்தப்படும் திறந்த வகை COEக்கான பிரீமியம் $100,697 இல் முடிந்தது.
  • மோட்டார் சைக்கிள்களின் உரிமைச் சான்றிதழ்க் கட்டணம் 9,490 வெள்ளியிலிருந்து 10,000 வெள்ளிக்கு உயர்த்தப்பட்டது.
சிங்கப்பூரில் வசிக்கும் தமிழரா நீங்கள்? உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி title=

சிங்கப்பூரில் உள்ள வாகன ஓட்டிகளுக்கு முக்கிய செய்தி. வாகன உரிமை சான்றிதழ் கட்டணங்கள் அதிகரிக்கப்படுள்ளன.

சிங்கப்பூரில் சொகுசு கார்களுக்கான வாகன உரிமை சான்றிதழ் கட்டணங்கள் 100,000 வெள்ளியைத் தாண்டிச் சென்றுள்ளன. 

1994 ஆம் ஆண்டுக்குப் பிறகு பொதுப் பிரிவிலும் பி பிரிவிலும் உள்ள வாகனங்களுக்கான உரிமை சான்றிதழ் கட்டண உயர்வுகளில், தற்போது இதுவரை காணாத அளவு கட்டணங்கள் உயர்ந்துள்ளன. 

1,600சிசி மற்றும் 130 பிஎச்பி வரையிலான இன்ஜின்கள் கொண்ட கார்கள் அல்லது 110 கிலோவாட் வரை பவர் அவுட்புட் கொண்ட மின்சார வாகனங்களுக்கான பிரீமியம்  8.5 சதவீதம், அதாவது $68,001ல் இருந்து $73,801 ஆக உயர்ந்துள்ளது.

அந்த அளவுகோல்களுக்கு மேல் உள்ள கார்களுக்கு, COE பிரீமியம் $95,889 இலிருந்து $100,684 ஆக 5 சதவீதம் அதிகரித்துள்ளது.

பெரிய கார்களுக்குப் பயன்படுத்தப்படும் திறந்த வகை COEக்கான பிரீமியம் $100,697 இல் முடிந்தது, இது கடந்த சுற்றின் $95,901 இலிருந்து 5 சதவீதம் அதிகமாகும்.

மோட்டார் சைக்கிள்களின் உரிமைச் சான்றிதழ்க் கட்டணம் 9,490 வெள்ளியிலிருந்து 10,000 வெள்ளிக்கு உயர்த்தப்பட்டது. 

சரக்கு வாகனங்கள், வர்த்தக வாகனங்கள், பேருந்துகள் ஆகியவற்றின் உரிமைச் சான்றிதழ்க் கட்டணம் 51,501 வெள்ளியிலிருந்து 53,000 வெள்ளிக்கு உயர்ந்தது. 

மேலும் படிக்க | சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர் உட்பட 2 பேருக்கு காவல்துறை சிறப்பு விருது

பொதுவாக சிங்கப்பூர் அரசாங்கம் மக்கள் நலன் மற்றும் வசதிக்கான பல விதிகளை அவ்வப்போது அமலுக்கு கொண்டு வருகிறது. வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் சென்று பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் இந்த விதிகளைப் பற்றி தெரிந்துகொள்வதும், அவற்றை பின்பற்றுவதும் மிக அவசியமாகும்.

முன்னதாக, சிங்கப்பூரில் பொது மக்களுக்காக சுய நலம் கருதாமல் பொது நலத்துடன் சேவை செய்த 6 பேருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இது தவிர 3 அமைப்புகளுக்கும் ஒரு ஊழியருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. விருது பெற்றவர்களில் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் சென்று பணிபுரிபவர்களும் உள்ளனர். 

மேலும் படிக்க | துபாயில் ராபிள் குலுக்கல் போட்டியில் ரூ.7.5 கோடி வென்ற இந்தியர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News