தாய்லாந்து நாட்டில் நடைபெறவுள்ள 4வது மிஸ்டர் நேஷனல் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்க தமிழகத்தைச் சார்ந்த சரத் மனோகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸ், தாய்லாந்த், பிரேசில்,ஜெர்மனி, மலேசியா, பிரான்ஸ், பாகிஸ்தான் உள்ளிட்ட 25 நாடுகள் பங்கேற்கும் 4வது மிஸ்டர் நேஷனல் யுனிவர்ஸ் போட்டி தாய்லாந்து நாட்டில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்க தமிழகத்தைச் சேர்ந்த சரத் மனோகரன் தேர்வாகியுள்ளார்.
இவர் ஏற்கனவே 2020-21க்கான ரூபாரு மிஸ்டர் சவுத் இந்தியா பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மிஸ்டர் நேஷனல் யுனிவெர்ஸ் போன்ற உலகளாவிய போட்டியில் தமிழகத்தைச் சார்ந்த ஒருவர் பங்கேற்க இருப்பதை பலரும் பாராட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | வெளிநாடுகளில் குறைந்த சம்பளத்தில் வேலையா? இந்த பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொள்ளலாம்
தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் மே 29-2022 முதல் ஜூன் 6-2022 வரை நடைபெறும். போட்டியில் ஃபிட்னஸ் ரவுண்ட், டேலண்ட் ரவுண்ட், ஸ்டைலிங், மனோபாவம் மற்றும் நடத்தை, டிசைனர் வாக் ரவுண்ட், நீச்சலுடை நடை சுற்று, மற்றும் க்யூ & ஏ ரவுண்டை தீர்மானிக்கும் இறுதி டக்ஷிடோ உள்ளிட்ட பல்வேறு சுற்றுகளை கொண்டதாக போட்டி உள்ளது.
இந்நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மற்றும் நடுவர் குழுவில் தான்யா சிரி விஜித்சோம்போங் (மிஸ்டர் நேஷனல் யுனிவர்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி), பட்டமபோர்ன், நடேர், அங்கனங் ஷகிரா மற்றும் விகாஸ் உஷாம் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR