துபாயில் இந்திய தூதரகம் நடத்தும் பாஸ்போர்ட் சேவை முகாம்; முழு விபரம்

துபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸில் உள்ள 12 BLS இன்டர்நேஷனல் சர்வீஸ் லிமிடெட் மையங்களில் ஜூன் 26 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இந்திய துணைத் தூதரகம் (CGI) துபாய் பாஸ்போர்ட் சேவை முகாமை ஏற்பாடு செய்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 20, 2022, 08:01 PM IST
  • இந்திய துணைத் தூதரகம் (CGI) துபாய் பாஸ்போர்ட் சேவை முகாமை ஏற்பாடு செய்துள்ளது.
  • விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் முன் BLS இணையதளத்தில் அப்பாயிண்ட்மெண்ட்டை பதிவு செய்ய வேண்டும்.
துபாயில் இந்திய தூதரகம் நடத்தும் பாஸ்போர்ட் சேவை முகாம்;  முழு விபரம் title=

துபாய்: துபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸில் உள்ள 12 BLS இன்டர்நேஷனல் சர்வீஸ் லிமிடெட் மையங்களில் ஜூன் 26 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இந்திய துணைத் தூதரகம் (CGI) துபாய் பாஸ்போர்ட் சேவை முகாமை ஏற்பாடு செய்துள்ளது.

இந்தியத் தூதரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், “இந்திய புலம்பெயர்ந்தோரின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டு, பாஸ்போர்ட் மற்றும் அது தொடர்பான சேவைகளுக்கான தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இந்த பாஸ்போர்ட் சேவா முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களின் ஆன்லைன் விண்ணப்பத்தை 12 BLS மையங்களில், தேவையான துணை ஆவணங்களுடன், முன் கூட்டியே திட்டமிடப்பட்ட சந்திப்பு அடிப்படையில் மட்டுமே சமர்ப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் மற்றும் அது தொடர்பான சேவைகளுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் முன் BLS இணையதளத்தில் அப்பாயிண்ட்மெண்ட்டை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் படிக்க | அபுதாபி வாழ் தமிழர்களே அலர்ட்: இன்று முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை 

மேலும், அவசர கால வழக்குகளான, மருத்துவ சிகிச்சை, இறப்பு, பிறந்த குழந்தை, மூத்த குடிமக்கள் தொடர்பான அசில அவசர கால தேவைகளுக்கு வாக் இன் மூலம் பெறப்படும் விண்ணப்பதாரரின் ஆவண சான்றிதழ் ஏற்றுக் கொள்ளப்படும். 

ஜூன் 26 அன்று திறக்கப்படும் பிஎல் எஸ் மையங்கள்:

1.  அல் கலீஜ் மையம், அலுவலகம் எண்118 -119 மன்கூர் சாலை ,  பர் துபாய் (பாஸ்போர்ட் மற்றும் விசா பிரிவு)

2.  டெய்ரா சிட்டி சென்டர், அலுவலகம் எண் 13, ஜீனா கட்டிடம், தேரா துபாய்

3. ப்ரீமியம் லவுஞ்ச் மையம், அலுவலகம் எண் 507, பர் துபாய்

4. ஷார்ஜா எச்எஸ்பிசி மையம், அலுவலகம் எண் 11, அப்துல் அஜீஸ் மஜித் கட்டிடம், கிங் பைசல் தெரு, ஷார்ஜா

5. இந்தியன் அசோசியேஷன் ஷார்ஜா, பனியாஸ் ஸ்கொயர், தேரா துபாய்

6. அலுவலகம்  எண் 14, அப்துல் லத்தீப் அல் ஜ்ரூனி கட்டிடம், கிங் பைசல் சாலை உம் அல் குவைன்
7. ஐடி கம்ப்யூட்டர் கிராஷ், தஹான் சாலை, ராஸ் அல் கைமா

8. இந்திய நிவாரண குழு, நக்கீல் சாலை, ராஸ் அல் கைமா

9. இந்தியன் சங்கம் அஜ்மான், ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் சாலை, அஜ்மான்

10. இந்தியன் சோஷியல் கிளப் புஜைரா,  அல் பாசில் சாலை,  ஹில்டன் ஹோட்டல்,  புஜைரா

11. இந்தியன் சோஷியல் கிளப் கோர்ஃபக்கான், இந்திய பள்ளிக்கூடம் அருகே, கோர்ஃபக்கான்

மேலும் படிக்க | வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருபவர்களுக்கு மங்கிபாக்ஸ் சோதனை: அரசு அறிவிப்பு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News