Budget 2023-24 & NRI: பிப்ரவரி முதல் தேதியன்று 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகளையும் நிதியமைச்சர் வெளியிட்டார். பட்ஜெட் அறிவிப்புகள் மூலம் பல தரப்பட்ட மக்களுக்கு ஏராளமான நிவாரணம் அளிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு இந்த பட்ஜெட் பலனளிக்குமா? அல்லது அவர்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகவில்லையா?
இந்திய பட்ஜெட்டின் போது அறிவிக்கப்பட்ட மாற்றங்களால் என்ஆர்ஐயின் சேமிப்பு மற்றும் முதலீடுகளில் எதுபோன்ற மாற்றங்கள் இருக்கும்? இதில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான தாக்கங்களை பார்ப்போம். பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லை என்றாலும், இந்தியாவில் முதலீடுகளின் மீதான ஆதாயங்களை அதிகரிக்க உதவும் சில நன்மைகளை பார்ப்போம்.
NRIகளுக்கான வரிவிதிப்பு முறை தொடர்பாக இந்திய அரசாங்கம் தொடர்ந்து பணியாற்றி வருவதன் தொடர்ச்சியாக, 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், என்.அர்.ஐகளுக்கான நிவாரணங்கள் அதிக அளவில் இல்லை.
இந்திய பட்ஜெட்டில் என்ஆர்ஐகளுக்கு என்ன பலன்?
மியூச்சுவல் ஃபண்டுகளின் யூனிட்களின் வருமானத்தின் மீதான இரட்டை வரி விதிப்புத் தவிர்ப்பு ஒப்பந்தங்கள் (டிடிஏஏ) நன்மைகள் பற்றி தெளிவுபடுத்தபப்ட்டுள்ளது ஒரு நல்ல விஷயமாக பார்க்கப்பாடுகிறது. தற்போது என்ஆர்ஐக்கள் வரி வதிவிடச் சான்றிதழுக்கு (டிஆர்சி) விண்ணப்பித்து உடனடியாக பலனைப் பெறலாம் என்பது அனைவராலும் வரவேற்கப்படுகிறது.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளின் ஒரே வருமானத்தின் மீது வரி விதிக்கப்படும் என்பதால், இரட்டை வரியை தவிர்ப்பதற்கு பயன்படுகிறது வரி வதிவிடச் சான்றிதழ் (TRC) .DTAA ஒப்பந்தத்தின் கீழ் வருமான வரிச் சலுகையைப் பெற, வரி வதிவிடச் சான்றிதழ் (TRC) கட்டாயம் தேவை.
மேலும் படிக்க | Budget 2023-24 பட்ஜெட் உரை நிறைவு... முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?
2023-24 பட்ஜெட்டிற்கு முன்னதாக, தற்போதுள்ள நேரடி மற்றும் மறைமுக வரிவிதிப்பு முறைகளை சீரமைபப்தைத் தவிர, வரிவிதிப்பு முறையில் பெரிய மாற்றம் எதுவும் இருக்காது என்று சர்வதேச நிபுணர்கள் கணித்தது நிதர்சனமானது.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளின் வருமானத்தின் மீது இரட்டை வரிச் சலுகைகள் மற்றும் ஆஃப்ஷோர் டெரிவேட்டிவ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் (ODI) பரிமாற்றத்தின் மீதான NRI வருமானம் வரி விலக்கு என்பது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு நலன் பயக்கக்கூடியது.
வணிக அறக்கட்டளைகளால் குடியுரிமை பெறாதவர்களின் வட்டி வருமானத்தில் 5 சதவீதம் வரி விலக்கு குறைக்கப்பட்டது. இதுவரை, ஒரு என்ஆர்ஐ ஒரு வணிக அறக்கட்டளை மூலம் முதலீடு செய்யும் போது, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வட்டி வருமானத்தில் 5 சதவிகிதம் வரியைக் கழித்து, டெபாசிட் செய்ய வேண்டும் என்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | Budget 2023 Highlights: நிதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ