அபுதாபி சம்மர் பாஸ்: ஆன்லைனில் விற்பனை துவக்கம்

அபுதாபி மக்களுக்கு சுவாரசியமான மற்றும் தனித்துவமான அனுபவங்களை அளிக்கும் அபுதாபியின் புதிய சம்மர் பாஸ்கள் தற்போது ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகின்றன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 23, 2022, 07:39 PM IST
  • அபுதாபி வாழ் மக்களுக்கு நல்ல செய்தி.
  • பாஸின் விலை பெரியவர்களுக்கு 599 மற்றும் 4 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 499 என நிரணயிக்கப்பட்டுள்ளது.
  • மூன்று வயது மற்றும் அதற்கும் குறைவான குழந்தைகளுக்கு காம்ப்ளிமெண்டரி பாஸ்கள் கிடைக்கும்.
அபுதாபி சம்மர் பாஸ்: ஆன்லைனில் விற்பனை துவக்கம் title=

அபுதாபி வாழ் மக்களுக்கு நல்ல செய்தி!! அபுதாபி மக்களுக்கு சுவாரசியமான மற்றும் தனித்துவமான அனுபவங்களை அளிக்கும் அபுதாபியின் புதிய சம்மர் பாஸ்கள் தற்போது ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகின்றன. 

இந்த பாஸ்கள் மூலம் அபுதாபியின் சுவாரசியமான காட்சிகள் மற்றும் அனுபவங்களை மக்கள் பெறலாம். இது ஆகஸ்ட் 31 வரை செல்லுபடியாகும். இந்த பாஸை பார்வையாளர்கள் summerpass.visitabudhabi.ae என்ற வலைத்தளத்திலிருந்து பெறலாம். 

பாஸின் விலை பெரியவர்களுக்கு 599 மற்றும் 4 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 499 என நிரணயிக்கப்பட்டுள்ளது. மூன்று வயது மற்றும் அதற்கும் குறைவான குழந்தைகளுக்கு காம்ப்ளிமெண்டரி பாஸ்கள் கிடைக்கும்.

NRI News In Tamil

மேலும் படிக்க | அபுதாபியில் அசத்தும் இந்திய பள்ளி: மதிப்பெண்களை அள்ளிய 49 மாணவர்களுக்கு கோல்டன் விசா

பாஸ் வைத்திருப்பவர்கள் ஃபெராரி வேர்ல்ட் அபுதாபியில் ரோலர் கோஸ்டரில் சவாரி செய்யலாம், தங்களுக்குப் பிடித்த டிசி சூப்பர் ஹீரோக்களை Warner Bros WorldTM அபுதாபியில் சந்திக்கலாம். மேலும் Yas Waterworld அபுதாபியில் 40-க்கும் மேற்பட்ட சவாரிகள் மற்றும் ஸ்லைடுகளை அனுபவிக்கலாம்.

பாஸில் லூவ்ரே அபுதாபிக்கு ஒரு நாள் பயணம், அபுதாபி மற்றும் அல் ஐன் முழுவதும் உள்ள 13 கலாச்சார அடையாளங்கள் மற்றும் நிறுவனங்களுக்கான தள்ளுபடி அணுகல் ஆகியவை இதில் அடங்கும். இதில் கஸ்ர் அல் ஹொஸ்ன், ஹவுஸ் ஆஃப் ஆர்டிசன்ஸ், கஸ்ர் அல் வதன், அல் ஐன் பேலஸ் மியூசியம், அல் ஜாஹிலி கோட்டை மற்றும் கஸ்ர் அல் முவைஜி ஆகியவை இதில் அடங்கும்.

அபுதாபி சம்மர் பாஸ், விசிட் அபுதாபி ஷட்டில் பஸ் நெட்வொர்க்கிலும், யாஸ் எக்ஸ்பிரஸில் யாஸ் தீவிற்குள்ளும் நகரத்திற்குள் காம்ப்ளிமெண்டரி போக்குவரத்தையும் உள்ளடக்கியது.

மேலும் படிக்க | UAE: தொழிலாளர் ஊதிய பிரச்சனைகளை தீர்க்க மனித வள மேம்பாட்டு அமைச்சக தலைமையில் குழு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News