நாடு முழுவதும் உள்ள 5,000 அரசு சாரா அமைப்புகளுக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று மத்திய இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
என்.ஜி.ஓ-க்கள் செயல்பாடு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு எழுத்து மூலம் பதில் கொடுத்துள்ளார்.
அந்த கடித்ததில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது...!
"வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாததால், வெளிநாட்டு நிதி உதவி ஒழுங்கு முறை சட்டப்படி (F.R.C.A) கடந்தாண்டு, ஏப்ரல் 1-ல், நாடு முழுவதும், 5,000 என்.ஜி.ஓ-க்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. இதனால், இந்த தொண்டு நிறுவனங்களால், வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற முடியாது.
வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு அவர்களது கணக்கை தாக்கல் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது. கடந்த, 2010-2011 நிதியாண்டில் இருந்து, எந்த அபராதமும் இல்லாமல் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த வாய்ப்பை பயன்படுத்தத் தவறியதால் அந்த அமைப்புகளின் உரிமைகளே ரத்து செய்தனர்" என்று அவர் கூறியுள்ளார்.
பல என்.ஜி.ஓ-க்கள் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெற்று மத மாற்றம் முதல் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்தவண்ணம் உள்ளன. இந்தியாவில், அரசுக்கு எதிராக நடைபெற்ற பல போராட்டங்கள் இப்படி வெளிநாடுகளில் இருந்த பெறப்பட்ட பணத்தை வைத்தே நடத்தப்பட்டது என்றும் அவர் குறிபிட்டார். இதனால், வெளிநாடுகளில் இருந்து பெற்ற நிதியை, முறையாக செலவு செய்ததற்கான கணக்கை காட்டும்படி அரசு கூறியது.
கணக்கைக் கூட காட்ட முடியவில்லை என்றால், இந்த நிறுவனங்கள் எப்படி செயல்பட்டிருக்கும்?. வெளிநாடுகளில் இருந்து கிடைத்த பணத்தை வைத்து என்ன செய்திருப்பார்கள் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.