பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே 65-வது தேசியத் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இராணி மற்றும் ராஜ்யவர்தன் சிங் ரதோர் விருதுகளை வழங்கினர்.
இதனையடுத்து 11 பேருக்கு மட்டும் தேசிய விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
அதில், "மாம்" திரைப்படத்திற்காக, நடிகை ஸ்ரீதேவிக்கான தேசிய விருதை, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மூத்த மகள் ஜான்வி கபூர், இளைய மகள் குஷி கபூர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
வினோத் கண்ணாவுக்கு தாதாசாகிப் பால்கே விருது, அவரின் மனைவி கவிதா பெற்றுக் கொண்டார். சிறந்த பாடகருக்கான தேசிய விருதினை பெற்றுக்கொண்டார்.
அதேபோன்று சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை ஏ.ஆர்.ரகுமான் பெற்று கொண்டார். மற்றவர்களுக்கு அமைச்சர்கள் ஸ்மிருதி இராணி மற்றும் ராஜ்யவர்தன் சிங் ரதோர் விருதுகளை வழங்கினர்.
19:28 03-05-2018
65-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் தொடங்கியது. மத்திய செய்தி, ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி விருதுகளை வழங்கி வருகிறார். பாடகர் யேசுதாஸ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோருக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
17:39 03-05-2018
தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் 11 பேருக்கு விருது வழங்குவார் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஒருவருக்கு கூட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருது வழங்கவில்லை. இதற்கான காரணமும் முறையாக தெரிவிக்கப்படவில்லை.
16:44 03-05-2018
தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடமிருந்து விருதுகளை வாங்க மறுத்து விழாவை புறக்கணித்த திரைக்கலைஞர்களுக்கான இருக்கைகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
2017ஆம் ஆண்டுக்கான 65-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த 13ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. இந்த விருதுகள் பட்டியலில் சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதை ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய ‘டூலெட்’ திரைப்படம் பெற்றுள்ளது.
காற்று வெளியிடை மற்றும் ஸ்ரீதேவி நடித்த மாம் படத்திற்கு இசையமைத்தற்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு 2 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்ட விருதுகள் அனைத்தும் வரும் மே 3-ஆம் நாள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, 65வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெறவிருக்கிறது.
அதில், தேசிய விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களில் குறிப்பிட்ட 11 பேருக்கு மட்டும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருது வழங்க இருப்பதாகவும்.
மற்றவர்களுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விருது வழங்குவார் என்றும் தகவல் வெளியானது.
இந்த தகவலால் விருது பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்களில் 60-க்கும் மேற்பட்டோர் விருது வழங்கும் விழாவை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.
அதில், சிறந்த தமிழ்ப் பட விருதுக்கு தேர்வான தமிழகத்தை சேர்ந்த செழியன் உள்ளிட்டோர் விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
இப்படத்திற்கு முன்னதாக செழியன் ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘தாரை தப்பட்டை’, ‘பரதேசி’, ‘ஜோக்கர்’ உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.
இளம் தம்பதியர், அவர்களது மகன் ஆகியோரை இந்த ‘டூலெட்’ என்கிற வார்த்தை எப்படி அலைகழிக்கிறது என்பதை எதார்தமாக காட்டசிப்படுத்திய செழியன் அவர்கள் இயக்குனராக அறிமுகம் ஆகும் முதல் படம் இது என்பது குறிப்பித்தக்கது.
இன்று மாலை தேசிய விருது வழங்கும் விழா நடைபெறவுள்ள நிலையில் இந்த சர்ச்சை சமூக வலை தளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.