அமுதாவும் அன்னலட்சுமியும்: அன்னம் கொடுத்த அதிர்ச்சி.. அமுதா எடுத்த முடிவு!!

Amudhavum Annalakshmiyum: மன்னிப்பு கேட்டு  அன்னம் கொடுத்த அதிர்ச்சி..  அமுதா எடுத்த முடிவு - அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 2, 2023, 11:55 AM IST
  • அன்னத்துக்கு ஆறுதல் கூறும் செந்தில், அமுதா.
  • அமுதாவுக்கு அதிர்ச்சி.
  • சீட்டுகளை கொண்டு வரும் வடிவேலு.
அமுதாவும் அன்னலட்சுமியும்: அன்னம் கொடுத்த அதிர்ச்சி..  அமுதா எடுத்த முடிவு!! title=

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்.

இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் வடிவேலு தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என மாணிக்கம் திட்ட அன்னம் அவனை அடித்த நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அன்னத்துக்கு ஆறுதல் கூறும் செந்தில், அமுதா

அதாவது, மாணிக்கம் அன்னம் அடித்ததை நினைத்து பீல் செய்ய செந்திலும் அமுதாவும் அவருக்கு ஆறுதல் சொல்கின்றனர். அதன் பிறகு அமுதா ரூமில் அன்னலட்சுமி சொன்னதை நினைத்து சாப்பிடாமல் இருக்க, செந்தில் அவளுக்கு ஆறுதல் சொல்லி அவளுக்கு சாப்பாடு ஊட்டி விடுகிறான்.

இதனையடுத்து இரவு அன்னலட்சுமி ஒரு புறம் தூங்காமல் சிதம்பரம் சொன்னதை நினைத்து நினைத்து வேதனைப்பட அமுதாவும் அன்னம் சொன்ன வார்த்தைகளால் தூங்காமல் வேதனையுடன் இருக்கிறாள். மறுநாள் அன்னலட்சுமி காலையில் எழுந்து அமுதா கிட்ட அப்படி நடந்துகிட்டது தப்பு தான் என சொல்ல, அமுதா பெரியவங்க நீங்க இப்படி பெரிய வார்த்தை எல்லாம் பேசலாமா , நீங்க என் கிட்ட பேசுனதும் எனக்கு தெம்பு வந்தது மாதிரி இருக்கு என சொல்கிறாள்.

மேலும் படிக்க | பட வேட்டைக்கு தயாரா மக்களே? இந்த மாதம் வெளியாகவுள்ள படங்களில் லிஸ்ட்!

அமுதாவுக்கு அதிர்ச்சி

உடனே அன்னம் அமுதாவை வேலையை விடச் சொல்ல அமுதா அதிர்ச்சி அடைகிறாள்.

ப்ளாஷ் கட்டில் வடிவேலு அன்னத்திடம் அமுதா அண்ணி நமக்காக தான் அவங்க அம்புட்டு பெரிய குடும்பத்தை விட்டுட்டு வந்தாங்க, ஆனா அவங்க பார்க்குற வேலை அவங்களை யோசிக்க வைக்குது, வீட்டோட குடும்ப பொறுப்பையும் நிர்வாகத்தையும் பார்த்துக்கட்டும் என திருந்தியது போல நடிக்கிறான்.

சீட்டுகளை கொண்டு வரும் வடிவேலு

அன்னலட்சுமி அமுதாவிடம் வீட்டுல உள்ள வேலைய பொறுப்பா பார்த்துகிட்டா போதும் என சொல்ல அமுதா மாமா ஆசைப்பட்டு தான் இந்த பதவில நான் இருக்கேன், மாமா போட்டோ முன்னால எழுதிப் போட்டு பார்க்கலாம், அதுல நான் வேலைக்கு போக வேண்டாம்னு வந்தா தான் வேலையை விட்டு விடுவதாக சொல்கிறாள். வடிவேலு  இரண்டு சீட்டுகளை எடுத்து வர மாணிக்கம் உன்னை நாங்க எப்படி நம்புறது என சொல்லி அந்த இரு சீட்டுகளையும் பிரிக்க போகிறான்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சியும் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது

அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.

மேலும் படிக்க | “நான் பார்த்ததிலேயே அழகான பெண்களில் ஒருவர் கீர்த்தி..” மாமன்னன் படவிழாவில் போனி கபூர் பேச்சு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News