Watch Video: குணமடைந்து வரும் யாஷிகா ஆனந்த்

 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 31, 2021, 05:36 PM IST
Watch Video: குணமடைந்து வரும் யாஷிகா  ஆனந்த் title=

 

ஜீவா - காஜல் அகர்வால் நடித்த கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அவர் கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி நள்ளிரவு தனது நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்றுவிட்டு திரும்பிய போது பயங்கர விபத்து ஏற்பட்டது. காரை யாஷிகா ஆனந்த் (Yashika Aannand) ஓட்டி சென்ற நிலையில் அவருக்கு அருகே அவரது தோழி வள்ளிச்செட்டி பவானி அமர்ந்திருந்தார். கடற்கரைச் சாலையில் சூலேறிக்காடு அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிக்கிய யாஷிகாவுக்கு இடுப்பு மற்றும் முதுகில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.  இந்நிலையில், தற்போது அவர் இன்ஸ்டாகிராம் பதிவில், தான் குணமாகி வருவதாக தெரிவித்து, தான் வாக்கர் உதவியுடன் நடக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.  

 

 
 
 

 

 

 

 

 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Y A S H (@yashikaaannand)

 

 

ALSO READ | மருத்துவமனையில் இருக்கும் யாஷிகாவுக்கு நடிகை வனிதா அறிவுரை

கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான யாஷிகா ஆனந்த், துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் 2-வது சீசனில் பங்கேற்று பிரபலமடைந்தார் யாஷிகா ஆனந்த்.

ALSO READ | பயங்கர கார் விபத்து; நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம்: தோழி மரணம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News