100 கோடியை எட்டியது "விவேகம்"!

Last Updated : Aug 29, 2017, 01:18 PM IST
100 கோடியை எட்டியது "விவேகம்"! title=

தமிழ் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தமிழ் திரைப்படம் "விவேகம்" தனது வசூல் சாதனையில் அடுத்த மயில்கல்லை எட்டியுள்ளது. 

தற்போது விவேகம் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் பெற்ற படங்களின் பட்டியலில் இணைந்துள்ளது. ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியான விவேகம் இந்தியாவில் 69 கோடி ரூபாயும், இந்தியாவை தவிர பிற நாடுகளில் வெளியானதில் 36.50 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது.

 

 

 

 

 

 

 

 

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவான "விவேகம்" ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது என்பதை அப்படத்தின் வசூல் நிறுபித்துள்ளது. 

முன்னதாக டைம்ஸ் ஆப் இந்தியா அறிக்கையின்படி, விவேகம் திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் 4.28 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதற்குமுன் எஸ்.எஸ்.ராஜமௌலியின் பாகுபலி-2 மூன்று நாட்களில் 3.24 கோடி வசூல் செய்தது. இந்த சாதனையை தற்போது விவேகம் முறியடித்துள்ளது.

இத்திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது, மேலும் இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக தல அஜீத் உருவாகியுள்ளார் என்பதிலும் ஐயம் இல்லை.

Trending News