இன்று நள்ளிரவு முதல் விவேகம் டீசர் வெளியீடு!

Last Updated : May 10, 2017, 12:53 PM IST
இன்று நள்ளிரவு முதல் விவேகம் டீசர் வெளியீடு! title=

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் விவேகம். கடந்த பிப்ரவர் 2-ம் தேதி இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் அஜித்தின் கட்டுமஸ்தான தோற்றமும், போஸ்டரின் டிசைனும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு அடிக்கடி அஜித்தின் சில புகைப்படங்களை வெளியிட்டு அஜித் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி வந்தனர் படக்குழு.

அஜித்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதியன்று படத்தின் டீசர் வெளியாகும் என்று மிகவும் ஆவலுடன் ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் டீசர் வெளியிடப்படவில்லை. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் நாளை (மே 11-ம் தேதி) 12.01 மணிக்கு விவேகம் படத்தின் டீசர் வெளியாகிறது என இயக்குனர் சிவா தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இந்த படத்தில் விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் மற்றும் பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார்.

Trending News