அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் 'விவேகம்' இன்று வெளியானது!

Last Updated : Aug 24, 2017, 11:09 AM IST
அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் 'விவேகம்' இன்று வெளியானது! title=

இன்று முதல் அஜித்தின் பிரம்மாண்டம்.

இயக்குனர் சிவா இயக்கத்தில் ‘விவேகம்’  திரைப்படம் இன்று உலக முழுவதும் பிரம்மாண்டமான முறையில் வெளியானது. இதில் அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் ஆகியோர் நடித்து உள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.

‘தல’ அஜீத்தின் ‘விவேகம்’  திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியான முதல் டிரைலர் வரை பெரும் ஆதாரவு கிடைத்தது. சமூக வலைத்தளங்களிலும் பெரிதாக வரவேற்பு பெற்றது.

இதுவரை அஜித் நடிக்க படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படமாகும். சுமார் 50 கோடிக்கு தமிழ்நாடு உரிமை மட்டும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பல்வேறு திரையரங்குகளில் அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்துவருகின்றன.

இன்று முதல் ‘விவேகம்’ ஆட்டம் ஆரம்பம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இன்று முதல் விவேகம்:-

அஜித் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் 'விவேகம்' படத்துக்கு ரசிகர்களுக்கான பிரத்யேக காட்சிகள் அதிகாலை 4 மணிக்குத் தொடங்கிவிட்டது.

ரசிகர் மன்றங்கள் சார்பாக பிரமாண்ட கட்-அவுட்கள், செங்கோட்டை வடிவிலான அலங்காரம், போஸ்டர்கள், வாழை மர அலங்காரம், பாலபிஷேகம் என அமர்க்களப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். 

அஜித் என்ட்ரி, 'அஜித் - காஜலின் எமோஷனல் காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கிறது' என நொடிக்கு நொடி டிவிட்டரில் அப்டேட்ஸ் தட்டிக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். 

சக சினிமா பிரபலங்கள் ஒருபக்கம் அஜித்தின் 'விவேகம்' வெற்றிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டிருக்க, கிரிக்கெட் வீரர் அஸ்வின் 'சென்னையில் பெரும் ரசிகர்கள் கூட்டத்துக்கு இடையே 'விவேகம்' படத்தைப் பார்க்கப்போகிறேன்' என டிவீட் செய்துள்ளார். 

தற்போது 'vivegam' என்ற ஹாஷ்டேக் சென்னை டிரெண்டிங்கில் டாப்பில் இருக்கிறது.

திரையரங்குகள்:-

சென்னையில் முக்கியமான திரையரங்கமான மாயாஜால் திரையரங்கில் முதல் வாரத்தில் மட்டும் சுமார் 330 காட்சிகள் திரையிடப்பட உள்ளன. இதற்காக டிக்கெட் முன்பதிவில் 75% முடிந்துவிட்டதாகவும், விரைவில் அனைத்துக் காட்சிகளின் டிக்கெட் விற்பனையும் முடிந்துவிடும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சென்னையின் முக்கியமான மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் 2 முதல் 3 திரையரங்குகள் வரை 'விவேகம்' திரையிட்டுள்ளார்கள்.

தமிழகத்தில் முதலில் 700 வரை திரையரங்குகள் ஒப்பந்தமிருக்கும் என்று தயாரிப்பு நிறுவனம் எதிர்பார்த்தது. தற்போது 720 திரையரங்குகளைத் தாண்டி ஒப்பந்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

உலக அளவில் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் அனைத்தையும் சேர்ந்து சுமார் 2,500 திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது. 

Trending News