படம் ரிலீஸே ஆகல அதுக்குள்ள ஓடிடி தேதியா? விக்ரம் ஓடிடி ரிலீஸ் தேதி

படம் ரிலீஸாவதற்கு முன்பே விக்ரம் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : May 27, 2022, 12:15 PM IST
  • ஜூன் 3 ஆம் தேதி ரிலீஸாகும் விக்ரம்
  • புரோமோஷன் பணிகளில் கமல் பிஸி
  • ஓடிடி தேதி ரிலீஸ் குறித்த தகவல் வெளியானது
படம் ரிலீஸே ஆகல அதுக்குள்ள ஓடிடி தேதியா? விக்ரம் ஓடிடி ரிலீஸ் தேதி title=

கமல்ஹாசன் தயாரித்து நடித்திருக்கும் விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி ரிலீஸாகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பான் இந்தியா படமாக ரிலீஸாகும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார். தமிழின் நட்சத்திரமாக இருக்கும் விஜய் சேதுபதி, மலையாள சூப்பர் ஸ்டார் பகத் ஃபாசில் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சர்பிரைஸ் ரோலில் சூர்யா நடித்திருக்கிறார். அது சஸ்பென்ஸாக வைக்கப்பட்டுள்ளது. படம் வெளியாவதற்கு ஒரு வாரம் மட்டுமே இருப்பதால், புரோமோஷன் பணிகளில் படு பிஸியாக இருக்கிறார் கமல்.

மேலும் படிக்க | “நிறைய பார்த்தாச்சு... இது தொடக்கம்தான்” - திருமணத்திற்கு தயாராகும் நயன்தாரா

சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதனை முடித்த கையோடு டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் விக்ரம் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். புதிய முயற்சியாக ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சியையும் விக்ரம் புரோமோஷனுக்காக செய்திருந்தார். ஓரிரு நாட்களில் மலேசியாவில் நடைபெறும் விக்ரம் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் கமல் பங்கேற்க இருக்கிறாராம். கூடுதல் தகவல் என்னவென்றால் நடிகர் சூர்யா இந்த புரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. 

தமிழகம் முழுவதும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் விக்ரம் படத்தை வெளியிட இருக்கிறது. டெலிவிஷன் உரிமையை விஜய் டிவியும், ஓடிடி ரிலீஸ் தேதியை ஹாட்ஸ்டார் நிறுவனமும் கைப்பற்றியுள்ளன. இது குறித்த அறிவிப்பை அண்மையில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது. மிகப்பெரிய தொகை கொடுத்து விக்ரம் படத்தை ஹாட்ஸ்டார் நிறுவனம் வாங்கியிருப்பதாக கூறப்படும் நிலையில், படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் மாதம் ஓடிடியில் ரிலீஸ் செய்ய ஹாட்ஸ்டார் முடிவெடுத்துள்ளதாம். ஜூன் 3 ஆம் தேதி படம் வெளியான பிறகு அதிகாரப்பூர்வமாக தேதியை அறிவிக்க இருக்கிறதாம் ஹாட்ஸ்டார். 

மேலும் படிக்க | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் சூர்யா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News