வெளியானது விஜய்யின் அடுத்த படத்தின் அறிவிப்பு! முழு தகவல் இதோ!

ஆர்.பி.சௌத்ரியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படத்தில் விஜய் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 24, 2023, 02:19 PM IST
  • விஜய்யின் 'பூவே உனக்காக' படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
  • சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய் பல படங்களில் நடித்துள்ளார்.
  • மீண்டும் தெலுங்கு இயக்குனர் ஒருவரின் படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார்.
வெளியானது விஜய்யின் அடுத்த படத்தின் அறிவிப்பு! முழு தகவல் இதோ! title=

இந்திய திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் பல வெற்றி திரைப்படங்களை தயாரித்துள்ளது.  தற்போது நிறுவனம் தனது 100-வது படத்தில் விஜய்யை நடிக்க வைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் விஜய் நடிப்பது இது முதல் தடவையல்ல, இந்த நிறுவனத்தில் தயாரித்திருந்த விஜய்யின் படங்கள் எல்லாம் மிகப்பெரியளவில் வெற்றியை பெற்ற படங்கள் என்றே கூறலாம்.  90களில் விஜய்யின் சூப்பர் ஹிட் படமாக அமைந்த 'பூவே உனக்காக' படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரித்து இருந்தது.  இந்த வெற்றி படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், ஷாஜகான், திருப்பாச்சி போன்ற வெற்றி படங்களை ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

மேலும் படிக்க | தலைவர் 171 திரைப்படம் குறித்த ரஜினியின் திட்டம்

 

அதன்பின்னர் பெரிதாக படங்கள் எதையும் தயாரிக்காமல் இருந்து வந்த சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் மீண்டும் விஜய்யை வைத்தே 2014-ம் ஆண்டு 'ஜில்லா' படத்தை தயாரித்திருந்தது.  இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், படம் பாக்ஸ் ஆபிசில் வசூலை அள்ளியது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் மீண்டும் தயாரிப்பு நிறுவனம் விஜய்யை வைத்து மற்றொரு படத்தை தயாரிக்க திட்டமிட்டு, அதன்படி விஜய்யிடம் கடந்த சில வருடங்களாகவே பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.  விஜய் தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி இருந்ததால், இந்த தயாரிப்பு நிறுவனத்தில் கீழ் அவரால் நடிக்க முடியாமல் போனது.  தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 'லியோ' படத்தில் கொண்டிருக்கிறார், இந்த படத்தை முடித்ததும் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க விஜய் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் விஜய் நடிப்பதாக செய்திகள் வெளியான நிலையில், இந்த படத்தை தான் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  சமீபத்தில் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கிய 'வாரிசு' படத்தில் விஜய் நடித்திருந்த நிலையில், மீண்டும் ஒரு தெலுங்கு இயக்குனரின் படத்தில் விஜய் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.  லியோ படத்தை முடித்த கையோடு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கப்போவதாக கூறப்பட்ட நிலையில், சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படத்தில் விஜய் நடிக்கப்போகும் செய்தி வெளியாகியுள்ளது.  சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படத்தில் விஜய் நடிப்பது உறுதி என்றாலும், படத்தை கோபிசந்த் இயக்கப்போவது உறுதிதானா? அல்லது கடைசி நேரத்தில் இயக்குனர் மாற்றப்படுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க | செக் மோசடி வழக்கு: சிறை தண்டனை நிறுத்திவைப்பு, உயர்நீதிமன்றம் உத்தரவு

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News