வெளியானது நடிகர் விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ படத்தின் டீசர்! Video!

நடிகர் விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்தின் டீசர் இன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 11, 2021, 01:41 PM IST
வெளியானது நடிகர் விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ படத்தின் டீசர்! Video! title=

டெல்கிபிரசாத் தீனதாயள் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ராஷிகண்ணா, பார்த்திபன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் துக்ளக் தர்பார். அரசியல் நையாண்டி பாணியில் உருவாகி வருகிறது. லலித் குமார் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைக்கும் ‘துக்ளக் தர்பார்’ (Tughlaq Durbar) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்னதாக வெளியானது. இதனை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்தனர். ஏற்கெனவே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தில் நடிக்க சம்யுக்தா ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

ALSO READ | Master திரைப்படத்தின் 5வது ப்ரமோவில் வசனத்தில் கலக்கும் விஜய் சேதுபதி & விஜய்

இந்நிலையில் தற்போது ‘துக்ளக் தர்பார்’ படத்தின் டீசர் இன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி (Viralவருகிறது. டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். 

 

 

இதற்கிடையில் நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள மாஸ்டர் படம் வருகிற ஜனவரி 13ஆம் தேதி வெளியாக உள்ளது. நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது நான்கு திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

ALSO READ | Breaking: இந்த தேதியில் விஜய் மாஸ்டர் வெளியீடு - ஆனால் ....

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News