“ரஜினிக்கே 6 படங்கள் தோல்விதான்..” சர்ச்சையில் மாட்டிக்கொண்ட விஜய் தேவரகொண்டா..!

Vijay Devarakonda: பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகாெண்டா, ரஜினிக்கு 6 படங்கள் தோல்வி என்று பேசி சர்ச்சையில் மாட்டிக்கொண்டார். 

Written by - Yuvashree | Last Updated : Aug 23, 2023, 10:21 AM IST
  • விஜய் தேவரகொண்டா நடித்துள்ள குஷி படம் விரைவில் வெளியாக உள்ளது.
  • இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடைப்பெற்றது.
  • ரஜினியின் ஃப்ளாப் படங்கள் குறித்து பேசிய விஜய் தேவரகொண்டா சர்ச்சையில் மாட்டிக்கொண்டார்.
“ரஜினிக்கே 6 படங்கள் தோல்விதான்..” சர்ச்சையில் மாட்டிக்கொண்ட விஜய் தேவரகொண்டா..!  title=

தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகர்களுள் ஒருவர், விஜய் தேவரகொண்டா. இவர் நடித்துள்ள ‘குஷி’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடைப்பெற்றது இதில் விஜய் தேவரகொண்டா கலந்து கொண்டார். 

‘குஷி’ திரைப்படம்:

காதல்-ட்ராமா-காமெடி படங்களுக்கு எப்போதும் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. அந்த வகையில் உருவாகி வரும் படம்தான், குஷி. இதில், விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்க, சமந்தா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். லெனின் விப்லவ் படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. குஷி படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பினை பெற்றுள்ளது. தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. படம், செப்டம்பர் 1ஆம் தேதி திரைக்கு வருகிறது. 

மேலும் படிக்க | மைனர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பிரபல இயக்குநர்!

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விஜய் தேவரகொண்டா:

‘குஷி’ படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. சமீபத்தில் பெங்களூரு மற்றும் ஐதராபாத் ஆகிய இடங்களில் நடைப்பெற்ற நிகழ்ச்சிகளில் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகியோர் கலந்து காெண்டனர். இதையடுத்து சமீபத்தில் கோயம்புத்தூரில் ‘குஷி’ படக்குழுவினருடன் விஜய் தேவரகொண்டா பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். 

ரஜினிக்கே 6 படம் ஃப்ளாப்…

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட விஜய் தேவரகொண்டாவிடம் படம் குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டது. அவரது சமீபத்திய படங்கள் தொடர் தோல்வி அடைந்து வருவது குறித்தும் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ரஜினி சாருக்கே 6 படம் ஃப்ளாப்தான் ஆனது. இப்போது ‘ஜெயிலர்’ படம் 500 கோடி வசூல் செய்துள்ளது. அதே போல சிரஞ்சீவிக்கும் 6-7 படங்கள் ஃப்ளாப் ஆனது. அவர், தற்போது ‘சங்கராந்தி’ படம் மூலம் சூப்பர் ஹிட் கொடுத்தார். சில சூப்பர் ஸ்டார்கள் வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டவர்கள். ரஜினி, சிரஞ்சீவி ஆகியோரின் படங்கள் சரியாக ஓடவில்லை என்றால் சிலர் அவர்களை விமர்சிப்பார்கள். ஆனால், அது எனக்கு சற்று மரியாதை குறைவான விஷயமாக தோன்றும்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், தான் இன்னும் ஜெயிலர் படத்தை பார்க்கவில்லை என்றும் அதை விரைவில் பார்ப்பேன் என்றும் கூறினார். சிறுவயதில் இருந்தே ரஜினியின் படங்களை பார்த்து வளர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், தமிழ் சினிமாவில் இருந்து வரும் திரைப்படங்களுக்கு தெலுங்கு சினிமாவில் அதிகம் ரசிகர்கள் இருப்பதாகவும் அவர் கூறினார். 

‘குஷி’ டைட்டில் விளக்கம்:

2000ஆம் ஆண்டு தமிழில் ‘குஷி’ திரைப்படம் வெளிவந்திருந்தது. அந்த படத்தில் விஜய்-ஜோதிகா ஆகியோர் நடித்திருந்தனர். இதையடுத்து, இந்த படம் தெலுங்கு மொழியிலும் ரீ-மேக் செய்யப்பட்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இதில் பவன் கல்யாண்-பூமிகா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படங்களுக்கு வைக்கப்பட்டிருக்கும் டைட்டில் தற்போது விஜய் தேவரகொண்டா படத்திற்கும் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவரிடம் நேற்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலுமே குஷி படம் சூப்பர் ஹிட் ஆனது. அந்த படங்களின் டைட்டில், என் படத்திற்கும் வைக்கப்பட்டுள்ளது எனக்கு பெருமை அளிக்கிறது. அந்த படங்களின் கதைகளுக்கும் இந்த படத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அந்த கதை வேறு, இந்த கதை வேறு..” என்று கூறியுள்ளார். 

மேலும் படிக்க | “மை3” சீரிஸின் போஸ்டர் வெளியீடு: பிக்பாஸ் பிரபலத்துடன் இணைந்து நடிக்கும் ஹன்சிகா..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News