உலகத்தரமான படத்தில் நடித்திருக்கிறேன் - விஜய் ஆண்டனி பெருமிதம்

‘கொலை’ என்ற உலகத்தரமான படத்தில் நடித்திருப்பதாக இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 14, 2022, 04:36 PM IST
  • விஜய் ஆண்டனி கொலை படத்தில் நடித்துள்ளார்
  • படத்தை பாலாஜி இயக்கியுள்ளார்
  • படத்தின் ட்ரெய்லர் நாளை ரிலீஸாகிறது
உலகத்தரமான படத்தில் நடித்திருக்கிறேன் - விஜய் ஆண்டனி பெருமிதம் title=

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது கிரைம் திரில்லர் வகை படமொன்றில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு 'கொலை' என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தை 'விடியும் முன்' படத்தை இயக்கிய  பாலாஜி குமார் இயக்கியுள்ளார். 'கொலை' படத்தை இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். மேலும் மீனாட்சி சௌத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைத்துள்ளார். இதன் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

விழாவில் நடிகர் விஜய் ஆண்டனி பேசும்போது, “உலகத்தரமான ஒரு படத்தில் பணியாற்றியது பெருமையாக இருக்கிறது. எந்த படத்துக்குமே முழுப்பொறுப்பு, இயக்குநர்தான். அவருக்குத் தூணாகவும் துரும்பாகவும் இருப்பதுதான் என்னைப் போன்ற டெக்னீஷியன்கள். இந்தப் படத்தின் இயக்குநர் பாலாஜி, இந்திய சினிமாவுக்கு கிடைத்திருக்கிற தரமான இயக்குநர் என்பது ‘கொலை’ படம் பார்க்கும்போது தெரியும்” என்றார்.

 

முன்னதாக படத்தில் இடம்பெற்றிருக்கும் நீர்க்குமிழோ என்ற சிங்கிள் பாடல் வெளியானது.

 

பாடலை கார்த்திக் நேத்தா எழுத சித் ஸ்ரீராம் பாடியிருக்கிறார். படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக, படமானதவிரைவில் வெளியாகவிருக்கிறது.

மேலும் படிக்க | நா. முத்துக்குமார் பெயரை சொன்னால் உள் நெஞ்சில் கொண்டாட்டம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News