பாலிவுட் பிரபலங்களை பின்னுக்குத் தள்ளி விஜய் - சமந்தா முதலிடம்

பிரபலமான இந்திய நடிகர்களின் பட்டியலில் தளபதி விஜய் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 21, 2022, 09:10 AM IST
  • இந்தியாவின் பிரபலமான நடிகர் விஜய்
  • பிரபல நடிகைகள் பட்டியலில் சமந்தா முதலிடம்
  • ஓரோமேக்ஸ் வெளியிட்ட புதிய கணிப்புகள்
பாலிவுட் பிரபலங்களை பின்னுக்குத் தள்ளி விஜய் - சமந்தா முதலிடம் title=

இந்திய அளவில் பாலிவுட் நட்சத்திரங்களே அதிக ரசிகர்கள் பட்டாளங்களையும், பேரும் புகழையும் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால், அதனையெல்லாம் சுக்குநூறாக உடைக்கும் வகையில் லேட்டஸ்டாக கருத்து கணிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதில், இந்திய அளவில் மிகவும் பிரபலமான சினிமா நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர் விஜய் முதல் இடம் பிடித்துள்ளார். டாப் 5 ஸ்டார்கள் பட்டியலிலும் தென்னிந்திய பிரபலங்களே உள்ளனர். ஒரு பாலிவுட் பிரபலம் கூட அந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை. 

மேலும் படிக்க | மலையாள நடிகருடன் திருமணமா? நித்யா மேனன் சுளீர் பதில்

அந்தப் பட்டியலில் அதிகபட்சமாக அக்ஷயக்குமார் 6வது இடத்தில் இருக்கிறார். ‘ஆர்மேக்ஸ் ஸ்டார்ஸ் இந்தியா லவ்ஸ் என்ற நிறுவனம் இந்தியாவில் மிகவும் பிரபலமான திரைப்பட நட்சத்திரங்கள் (ஜூன் 2022) பட்டியலை வெளியிட்டுள்ளது. நடிகர்கள் லிஸ்டில் விஜய் முதல் இடத்தை பிடித்திருக்கிறார். அவருக்கு அடுத்தடுத்த இடங்கள் முறையே பிரபாஸ், யாஷ், அல்லு அர்ஜுன் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர். 6வது இடத்திலும் அக்ஷயக்குமார் இருக்கும் நிலையில், மகேஷ் பாபு, அஜித் குமார், ராம் சரண் மற்றும் சூர்யா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் டாப் 10 லிஸ்டில் இருக்கின்றனர். 

நடிகைகள் லிஸ்டிலும் பாலிவுட் நடிகைகள் முதலிடத்தை பிடிக்கவில்லை. நடிகை சமந்தா முதல் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். ஜூன் 2022-ல் இந்திய அளவில் பிரபலமான நடிகை யார்? என்று எடுக்கப்பட்ட சர்வேயில் அதிகமானோர் சமந்தாவை டிக் அடித்துள்ளனர். அடுத்தடுத்த இடங்கள் முறையே ஆலியா பட், நயன்தாரா, காஜல் அகர்வால் மற்றும் தீபிகா படுகோன் பிடித்துள்ளனர். பூஜா ஹெக்டே 6வது இடத்திலும், கீர்த்தி சுரேஷ் 7வது இடத்திலும் உள்ளனர். காத்ரினா கைப் மற்றும் கீரா அத்வானிக்கு அடுத்தபடியாக 10வது இடத்தில் அனுஷ்கா இருக்கிறார்.

இதேபோல் Ormax Media நிறுவனம் 2022-ன் ஹிந்தி மொழியின் சிறந்த நிகழ்ச்சிகள் மற்றும் படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் 2022 ஆம் ஆண்டின் முதல் 10 இந்தியப் படங்களின் பட்டியலை IMDb வெளியிட்ட ஒரு வாரத்தில் இந்தப் பட்டியல் வந்துள்ளது. விக்ரம், கேஜிஎஃப் 2, தி காஷ்மீர் ஃபைல்ஸ், ஹிருதயம் மற்றும் ஆர்ஆர்ஆர் (ரைஸ் ரோர் ரிவோல்ட்) ஆகியவை 8 க்கும் மேற்பட்ட மதிப்பீடுகளுடன் டாப் லிஸ்டில் இடம்பிடித்துள்ளன.

மேலும் படிக்க | கழட்டிவிட்ட விஜய்! இரண்டு சூப்பர் ஸ்டார்களை இயக்கப்போகும் ஏஆர் முருகதாஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News