இதுவரை நேருக்கு நேர் மோதிக்கொண்ட விஜய் - அஜித் படங்கள்!

இதுவரை 12 முறை விஜய் மற்றும் அஜீத்தின் படங்கள் ஒரே நேரத்தில் திரையரங்கில் வெளியாகி உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 23, 2021, 12:29 PM IST
இதுவரை நேருக்கு நேர் மோதிக்கொண்ட விஜய் - அஜித் படங்கள்!  title=

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரங்களின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.  தனக்கு பிடித்த நடிகரின் அடுத்த படத்தை யார் இயக்கப் போகிறார்கள், யார் இசையமைக்கப் போகிறார், யார் தயாரிக்கப் போகிறார்கள் என்பது தொடங்கி இன்று சூட்டிங் ஸ்பாட்டில் என்ன நடந்தது என்பது வரை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.  ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் திரையரங்கில் வெளியானால் திருவிழா கோலமாக இருக்கும்.  இரண்டு உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானால்? சொல்லவே தேவையில்லை திரையரங்குகள் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் நிரம்பியிருக்கும். 

ajith

தற்போது கொரோனா தொற்று குறைந்து திரையரங்குகள் திறக்கப்பட்டு புதிய திரைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.  அந்த வகையில் அஜித்தின் வலிமை திரைப்படமும், விஜய்யின் பீஸ்ட் திரைப்படமும் 2022ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் ஒரே நாளில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   இதற்கு முன்வே ஒரே நாளில் வெளியான அஜித் மற்றும் விஜய் திரைப்படங்கள் . 

1996 - கோயம்புத்தூர் மாப்பிள்ளை - வான்மதி

1996 - பூவே உனக்காக - கல்லூரி வாசல்

1997 - காதலுக்கு மரியாதை - ரெட்டை ஜடை வயசு

1998 - நிலவே வா - உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் 

1999 - துள்ளாத மனமும் துள்ளும் - உன்னைத் தேடி

2000 - குஷி - உன்னைக் கொடு என்னைத் தருவேன்

2001 - தீனா - ஃப்ரெண்ட்ஸ்

2002 - பகவதி - வில்லன்

2003 - திருமலை - ஆஞ்சநேயா

2006 - ஆதி - பரமசிவம்

2007 - போக்கிரி - ஆழ்வார்

2014 - ஜில்லா - வீரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News