பழம்பெரும் நடிகை சீதாலட்சுமி இன்று காலமானார்!

பழம்பெரும் நடிகை சீதாலட்சுமி இன்று உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

Last Updated : Mar 1, 2019, 01:07 PM IST
பழம்பெரும் நடிகை சீதாலட்சுமி இன்று காலமானார்! title=

பழம்பெரும் நடிகை சீதாலட்சுமி இன்று உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

தமிழ் திரையுலகில் பிரபலமான நடன இயக்குனராக வலம் வரும் ராதிகா அவர்களின் தாயார் சீதாலட்சுமி. இவர் இன்று மாலை 6 மணியளவில் காலமானார். இவருக்கு வயது 87. 

கடந்த சில தினங்களாக இவர் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட பலருடன் நடித்த பெருமைக்குரியவர் நடிகை சீதா லட்சுமி. எங்க வீட்டுப்பிள்ளை படத்தில் நம்பியாரின் சகோதரியாக நடித்தவர்தான் சீதாலட்சுமி. 

இந்நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவருமான கலைமாமணி சீதாலட்சுமி உயிரிழந்துள்ளார். அவரின் இறுதி சடங்கு இன்று மாலை 4 மணிக்கு, விருகம்பாக்கம் மயானத்தில் நடைபெறுகிறது. இதில் பல்வேறு திரைக்கலைஞர்கள், பங்கேற்க உள்ளனர்.

Trending News