ரஞ்சிதமே ரஞ்சிதமே - வெளியானது வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் வெளியாகியிருக்கிறது.

Written by - க. விக்ரம் | Last Updated : Nov 5, 2022, 05:42 PM IST
  • வாரிசு முதல் சிங்கிள் ரிலீஸ்
  • ரஞ்சிதமே ரஞ்சிதமே என்று பாடல் தொடங்குகிறது
  • பாடல் இணையத்தில் வைரல்
ரஞ்சிதமே ரஞ்சிதமே - வெளியானது வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் title=

நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஜூலை  மாதம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.படத்தில் விஜய் ஆப் டெவலப்பராக நடிப்பதாக கூறப்படுகிறது. சென்னை, விசாகப்பட்டினம், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்புகள்  நிறைவடைந்த நிலையில் மற்ற பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. படத்தில் பிரபு, சரத்குமார், ஷ்யாம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தில்ராஜூ படத்தை தயாரிக்கிறார்.

படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இந்தச் சூழலில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது வெளியாகுமென்று ரசிகர்கள் காத்திருந்தனர். இதனையடுத்து வாரிசு படத்தின் முதல் சிங்கிள் தீபாவளிக்கு வெளியாகுமென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீபாவளி அன்று வாரிசு படத்தின் முதல் சிங்கிள் வெளியாகாமல் புதிய போஸ்டர் வெளியானது. அதுமட்டுமின்றி படம் பொங்கலுக்கு வெளியாவதையும் உறுதி செய்திருந்தது படக்குழு.

இந்தச் சூழலில் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் ப்ரோமோ நேற்று முன் தினம் (நவம்பர் 3) மாலை வெளியானது. மேலும் முழு பாடல் இன்று (நவம்பர் 5) வெளியாகுமென்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி வாரிசு படத்தின் முதல் சிங்கிள் இன்று வெளியாகியிருக்கிறது.  ‘கட்டுமல்லி கட்டி வச்சா’ என்று தொடங்கும் பாடலை விஜய் பாட பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கிறார். பாடலுக்கு ஜானி மாஸ்டர் நடனம் அமைத்திருக்கிறார். 

பாடலில் விஜய்யின் நடனம் வெகுவாக ரசிக்க வைக்கிறது. அதேசமயம் ஜானி மாஸ்டர் விஜய்யின் அழகான நடனத்தை கொன்றுவிட்டார் எனவும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. தற்போது இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் நடக்கவிருப்பதாகவும் அதில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொள்ளவிருக்கின்றனர் எனவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | தூரத்துலதான்டா காமெடி கிட்ட பார்த்தா டெரர்டா... வில்லனாகிறார் வடிவேலு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News