இத நோட் பண்ணீங்களா? லியோ படத்தில் வனிதாவின் மகன்.. வைரலாகும் புகைப்படம்

லியோ படத்தில் வனிதாவின் மகன் இடம்பெற்றுள்ள சுவாரசியமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. நடிகை வனிதா விஜயகுமாரின் மகன் ஸ்ரீ ஹரியின் புகைப்படம் இடம்பெற்றுள்ள காட்சியின் போட்டோ வைரலாகி வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 22, 2023, 08:22 AM IST
  • லியோ படத்தில் வனிதாவின் மகன்.
  • லியோ திரைப்படம் வசூல் நிலவரம்.
  • படத்தின் ஃபர்ஸ்ட் ஆப் படு ஃபயராக உள்ளது.
இத நோட் பண்ணீங்களா? லியோ படத்தில் வனிதாவின் மகன்.. வைரலாகும் புகைப்படம் title=

லியோ திரைப்படத்தில் வனிதாவின் மகன் இடம்பெற்றுள்ள சுவாரசியமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. நடிகை வனிதா விஜயகுமாரின் மகன் ஸ்ரீ ஹரியின் புகைப்படம் இடம்பெற்றுள்ள காட்சியின் போட்டோ வைரலாகி வருகிறது.

லியோ திரைப்படம்:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் இரண்டாவது முறையாக நடித்திருக்கும் படம் லியோ. லியோ திரைப்பத்திற்காக தமிழ் ரசிகர்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களுமே காத்துக்கொண்டிருந்தனர். ஒரு வழியாக படம், அக்டோபர் 19 ஆம் தேதி வெளியானது. லியோ படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வழங்கியது. மேலும் இந்த திரைப்படத்தில் த்ரிஷா கிருஷ்ணன், அர்ஜுன், மிஸ்கின், சஞ்சய் தத், கௌதம் மேனன், மற்றும் பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் ஆப் படு ஃபயராக உள்ள நிலையில், இரண்டாம் பாதியில் பல ட்விஸ்ட் இருந்தாலும், தேவையில்லாத சண்டை காட்சிகள் படத்தின் வேகத்தை இழுத்துவிட்டதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மறுபுறம் இந்த திரைப்படம் எல்.சி.யு லிஸ்டில் இணைந்துள்ளது ரசிகர்களுக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்துள்ள செம்ம ட்ரீட்டாக அமைந்துள்ளது.

மேலும் படிக்க | ‘விடாமுயற்சி’ படத்திற்காக உடல் மெலிந்த அஜித்..? வெளியானது புது புகைப்படம்..!

லியோ திரைப்படம் வசூல் நிலவரம்:
இதனிடையே இந்த திரைப்படம் முதல் நாளே, வெளிநாடுகளில் மட்டுமே சுமார் 50 கோடிக்கு மேல் வசூல் செய்த நிலையில், இந்தியா முழுக்க சுமார் 120 ரூபாய் கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிசில் கெத்து காட்டியுள்ளது. அதேபோல் இரண்டாம் நாள் ரூ 35.25 கோடியில் இருந்து பாக்ஸ் ஆபிஸ் வருவாயில் 11.88 சதவீதம் அதிகரிப்பு பதிவு செய்தது. இதன் மூலம், லியோவின் இந்திய வசூலின் நிகர மதிப்பு ரூ.140.05 கோடியை எட்டியுள்ளது.

அதே நேரத்தில், மூன்று நாட்களில், லியோவின் உலகளாவிய வசூல் ரூ.200 கோடியைத் தாண்டியுள்ளது. ஆனால் நேற்று முன்தினம் தமிழகத்தில் லியோ படம் குறைந்த அளிவிலான வசூலை செய்திருந்தாலும், நேற்று வசூலில் மீண்டும் உயரத்தை எட்டியுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று காலை காட்சி ஆக்கிரமிப்பு 65.73 சதவீதமாக இருந்தது, இது மாலை காட்சியின் போது 79.51 சதவீதமாக அதிகரித்துள்ளது. எனவே இதுவரை சுமார் 148 கோடி வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

லியோ திரைப்படத்தில் வனிதாவின் மகன்:
இந்நிலையில் இந்த திரைப்படம் குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது அதுவும் புகைப்பட ஆதாரத்துடன் வெளியாகியுள்ளது, அதன்படி இந்த திரைப்படத்தில் பிக்பாஸ் போட்டியாளரும், விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் நடித்திருந்த "நடிகை வனிதா விஜயகுமாரின்" மகன் ஸ்ரீ ஹரியின் புகைப்படம் இடம்பெற்றுள்ள காட்சியின் போட்டோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

லியோ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், சித்தப்பா அர்ஜுனிடம் தான் லியோ இல்லை என்பதை நிரூபிக்க தன்னுடைய சில குடும்ப புகைப்படங்களை காண்பிப்பார், அதில் தனது மகனின் முதல் பிறந்தநாளின் போது எடுத்த புகைப்படம் என்று காண்பிப்பார். அந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் வேறு யாரும் கிடையாது பிரபல நடிகையான வனிதா விஜயகுமாரின் மூத்த மகனான ஸ்ரீ ஹரிதான். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.

மேலும் படிக்க | சர்தார் 2 எப்போது? பெரிய அப்டேட் கொடுத்த கார்த்தி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News