சமீப காலங்களில் தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டும் அல்லாது, இந்தியா மற்றும் உலக அளவிலும் கூட மிக அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துயுள்ள படம் அஜித் கதாநாயகனாக நடிக்கும் 'வலிமை' திரைப்படம். படத்தைப் பற்றிய அறிவிப்பு வந்தது முதலே ரசிகர்களிடையே துவங்கிய ஆவல் தற்போது மிகப்பெரிய அலையாய் மாறியுள்ளது.
வலிமை (Valimai) படத்தைப் பற்றிய மிகச்சிறிய செய்தியும் சமூக ஊடகங்களில் டிரெண்ட் ஆகாமல் இருப்பதில்லை. இன்னும் சில நாட்க்களில் படம் வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் இது குறித்த ஆர்வம் மிக அதிகமாகி வருகின்றது.
இந்த நிலையில், வலிமை படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் ஆவலையும், கிரேசையும் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கவும் சிலர் ரகசியமாக முயன்று வருகின்றனர். சிலர் வலிமை படத்தின் டிக்கெட்டுகளை மிக அதிக ரூபாய்க்கு விற்க திட்டம் தீட்டி வருவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில், வலிமை படத்தின் டிக்கெட்டுகளை 1000 ரூபாய் வரை விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவையில் அஜித் ரசிகர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
சில தியேட்டர் உரிமையாளர்களும் மற்ற சில நபர்களும், அரசு நிர்ணயித்த ரூ.120 என்ற டிக்கெட் விலைக்கு பதிலாக ரூ.1000 என்ற விலையை நிர்ணயிப்பதாகவும், இதனால், உண்மையான அஜித் (Actor Ajith) ரசிகர்கள் அவதியுற நேரிடும் என்றும் இது நடக்காமல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக்கொள்ளப்ப்பட்டுள்ளது.
ALSO READ | வலிமையில் அஜித்தின் கேரக்டர் பற்றி கூறிய H.வினோத்!
ALSO READ | Valimai big update: வரும் வாரத்தில் வலிமை ட்ரெய்லர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR