ஆன்டி இண்டியன் படத்தை தொடர்ந்து மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா. அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்க கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், மேலும் அசோக் சார்லஸ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். தற்போது ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இந்த திரைப்படம் மூலம் வெற்றிகரமாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர். அத்துடன் இந்த படத்திற்கு பாடல்களை பா.விஜய் எழுத, வசனங்களை பாலமுரளி வர்மன் மற்றும் அஜயன்பாலா இருவரும் இணைந்து எழுதியுள்ளனர்.
#UyirThamizhukku is aiming for its theatrical release this month.
Mostly planning for Jun 29th (Bakrid Weekend)Cast - #Ameer #ChandiniSreedharan
Music - #Vidyasagar
Direction - #AdamBava Debut pic.twitter.com/5eUFJpOcwQ— Siva Prasanth (@Sivaprasanth5) June 13, 2023
இந்த திரைப்படத்தின் (உயிர் தமிழுக்கு) இறுதிகட்ட பணிகள் நிறைவடைந்துள்ளது. இதனால் இந்த மாத இறுதியில் அதாவது பக்ரீத் பண்டிகைக்கு இந்த திரைப்படத்தை வெளியிடும் விதமாக படக்குழுவினர் ரிலீஸ் சம்பந்தப்பட்ட வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மாநாடு என்கிற மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் இந்த திரைப்படத்தை வெளியிடுகிறார்
இந்த நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வைகைப்புயல் வடிவேலு, ஃபகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள "மாமன்னன்" படத்தையும் வருகிற பக்ரீத் பண்டிகையில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இதனால், உயிர் தமிழுக்கு படம் ஏற்கனவே திட்டமிட்டபடி பக்ரீத் பண்டிகைக்கு வெளியாகுமா என்கிற புதிய கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் மட்டுமல்ல, சென்டிமென்ட்டாகவும் இந்த திரைப்படத்தை பக்ரீத் பண்டிகை தினத்தில் வெளியிடுவதில் உறுதியாக இருகிறேறேன் என்று தயாரிப்பாளரும் இயக்குனருமான ஆதம் பாவா போட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
எனவே 'மாமன்னன்' படம் அரசியலை சீரியஸாக பேசுகிறது என்றால் 'உயிர் தமிழுக்கு' படம் இன்னொரு விதமாக நையாண்டி கலந்து அரசியலை பேச வருகிறது. அந்தவகையில் இந்த இரண்டு படங்களுமே ஆரோக்கியமான போட்டியுடன் ரசிகர்களை திரையரங்குகளை நோக்கி வரவழைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இவை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்த சில தினங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | தாராவுக்கு விழுந்த தர்ம அடி, நடந்தது என்ன? மாரி இன்றைய எபிசோட் அப்டேட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ