ஜோதிகாவின் 50வது படம்: உடன்பிறப்பே விமர்சனம்

உடன்பிறப்பே படம் அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கும் நிலையில், படத்தைப் பார்த்த செய்தியாளர் ஆனந்தகுமார் படம் குறித்து எழுதியுள்ளார்.

Written by - அதிரா ஆனந்த் | Last Updated : Oct 14, 2021, 10:42 AM IST
ஜோதிகாவின் 50வது படம்: உடன்பிறப்பே விமர்சனம் title=

கோலிவுட்டில் மசாலா, காமெடி, பேய்ப் படங்களுக்கு நடுவே என்றோ ஒருநாள் வெளியாகும் குடும்பத் திரைப்படம்தான் ‘உடன்பிறப்பே’. அப்படி வெளியான குடும்பப் படங்கள் அனைத்தும் சொல்லக்கூடிய அளவு வெற்றியையும் பதிவு செய்திருக்கின்றன. அந்த வரிசையில் உடன்பிறப்பே திரைப்படத்திற்கும் தாய்மார்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கோவக்கார அண்ணன் சசிகுமார், அவரது பாசமான தங்கை ஜோதிகா, ஜோவின் வாத்தியார் கணவன் சமுத்திரகனி, எதையும் சட்டரீதியாக அமைதி வழியில் சந்திக்க வேண்டும் என விரும்புபவர் இப்படி வலுவான கதையுடன் அருமையான கதாபாத்திரங்களுடன் உருவாகியிருக்கும் உடன்பிறப்பே (Udanpirappe), திரைக்கதையில் ஏதோ ஒரு இடத்தில் மொத்த கட்டமைப்பையும் கோட்டை விடுகிறது. 

ALSO READ | Movie Release: ஜோதிகாவின் 50வது திரைப்படம் உடன்பிறப்பே

முக்கிய கதாபாத்திரங்கள் நம்மை வெகுவாக கவர்ந்தாலும், தீபா, கலையரசன் முகங்களை அனைத்து படங்களிலும் பார்க்க சலிப்பு தட்டுகிறது. அண்ணனுக்கும் கணவனுக்கு மத்தியில் பாசப்போராட்டம் நடத்தும் தங்கையின் கதைதான். கிழக்குச் சீமையிலே டெம்ப்ளேட். ஆனால் அதில் ரசனையை புகுத்தத் தவறியிருக்கிறார் இயக்குநர். 

கணவனின் தங்கையைத் தனது மகளாக நினைப்பது, தனது மகனை விட அண்ணன் மகன் மீது அதிக பாசம் காட்டுவது, தனது மகன் தவறுசெய்துவிட்டான் என தெரிந்தவுடன் அவனை விட்டுக் கொடுக்கும் அப்பா என ஏகப்பட்ட நம்பமுடியாத காட்சிகள். இதெல்லாம் திரைப்படங்களில் மட்டுமே நடக்கின்றன. ஒரு பக்கம் தொலைக்காட்சி சீரியல்களில் வன்மத்தை கொட்டும் குடும்ப உறவுகள், மற்றொரு பக்கம் பெரிய திரையில் பாசத்தை கொட்டும் உறவுகள். இரண்டையுமே நமது அன்றாட குடும்ப வாழ்வோடு ஒத்திப் பார்க்க முடியாது.

ஜோதிகாவின் கோவக்கார அண்ணன் சசிக்குமார் ஊரில் யார் தவறு செய்தாலும் போட்டு வெளுக்கிறார். இது பிடிக்காத வாத்தியார் கணவன் சமுத்திரகனி இனி உன் அண்ணனுடன் பேச்சுவார்த்தை வேண்டாம் என ஒதுங்கியிருக்கிறார். இவர்களுக்குள் மீண்டும் எப்படி சமாதானம் நடக்கிறது என்ற கதையை குடும்பப் பட விரும்பிகள் ரசிக்கும் வகையில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் இரா.சரவணன். ஆனால் வெகுஜனத்தை இந்தப் படம் சென்றடைவது சந்தேகமே.

50ஆவது திரைப்படம் என்ற இமாலய சாதனையை தொட்டிருக்கும் ஜோதிகா இன்னும் பல திரைப்படங்களில் தாய், தங்கை, அண்ணி, மனைவி கதாபாத்திரங்கள் ஏற்று நடிப்பார் என எதிர்பார்க்கலாம். இன்று அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கும் உடன்பிறப்பே, பார்க்கலாம்.

(Authored By: Anandakumar M)

ALSO READ | MGR-ஆக அரவிந்த் சுவாமி.. ஜெயலலிதாவாக கங்கனா..

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News