பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தள வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்த குந்தவை

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்திருந்த த்ரிஷா அப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Written by - Yuvashree | Last Updated : May 2, 2023, 06:38 PM IST
  • பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் 200 கோடியளவில் வசூல் செய்துள்ளது.
  • நடிகை த்ரிஷா பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு தள வீடியோவை பகிர்ந்துள்ளார்.
  • பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை இரண்டாம் பாகம் மிஞ்சிவிடுமோ என ரசிகர்கள் மத்தியில் கிசுகிசுக்கப்படுகிறது.
பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தள வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்த குந்தவை title=

சில நாட்களுக்கு முன்பு வெளியாகி வசூலிலும் விமர்சனத்திலும் சக்கை போடு போட்டு வரும் படம் பொன்னியின் செல்வன் 2. இந்த படத்தில் த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, விக்ரம், பார்த்திபன், சரத்குமார் என கோலிவுட்டின் பாதி நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்த படம் குறித்த செய்திகளும் புகைப்படங்களும்தான் சமீப நாட்களில் ட்ரெண்டிங்கிள் உள்ளது. அந்த ட்ரெண்டிங் பட்டியலில் இப்போது த்ரிஷா வெளியிட்டுள்ள BTS வீடியோவும் இணைந்துள்ளது. 

 

குந்தவையாக த்ரிஷா:

 

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்துள்ள த்ரிஷா, படத்தின் ப்ரமோஷன்களில் கலந்து கொண்டு பட நிகழ்ச்சிகளை சிறப்பித்தார். அது மட்டுமன்றி, படத்திலும் நன்றாக நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார். இவருக்கும் வந்தியத்தேவனுக்குமான காதல் ரசிக்கும் படி இருந்தது என பலர் கூறினர். குந்தவை கதாப்பாத்திரத்தில் இவரை விட யாரும் பொருந்தியிருக்க மாட்டார்கள் எனவும் ரசிகர்கள் வட்டாரங்களில் பேசப்பட்டது. 

 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Trish (@trishakrishnan)

 

த்ரிஷாவின் BTS வீடியோ:

 

பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு 2021ஆம் ஆண்டில் நடைப்பெற்றது. படத்தின் இரண்டு பாகங்களுக்கான ஷூட்டிங்கும் 150 நாட்களுக்குள் நடத்தி முடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அந்த படப்பிடிப்பு தளத்தில்ல எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழுவினர் அடிக்கடி தங்களது சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்து வருகின்றனர். அந்த வகையில், நடிகை த்ரிஷாவும் இரண்டு வீடியோக்களை பதிவிட்டுள்ளார். இதில், முதல் வீடியோவை த்ரிஷா நேற்று பதிவிட்டார். இந்த வீடியோவில் குந்தவை வேடமணிந்து அவர் காபி அருந்தும் புகைப்படமும் அந்த வேடத்திலேயே படுத்து உறங்கும் புகைப்படமும் இடம் பெற்றிருந்தன. மேலும், அந்த வீடியோவில் படக்குழுவினருடன் எடுக்கப்பட்ட பல புகைப்படங்களும் பூமராங் வீடியோக்களும் இடம் பெற்றிருந்தன. 

 

மேலும் படிக்க | PS 2 பார்க்க ஜப்பானில் இருந்து சென்னை வந்த ஜோடி!

 

 

இரண்டாவது வீடியாே:

 

முதல் வீடியோவில் படக்குழுவினருடன் எடுத்திருந்த புகைப்படங்களை பகிர்ந்த த்ரிஷா, இந்த வீடியோவில் பொன்னியின் செல்வன் செட்டையும் கவர் செய்துள்ளார். படத்தில் பயன்படுத்திய படகு படமெடுக்க பயன்படுத்திய கேமரா என பலவற்றை தனது வீடியோவுடன் அவர் இணைத்துள்ளார். மேலும், குந்தவைக்கு தோழியாகவும் வானதியாகவும் நடித்திருந்த ஷோபிதா துலிபாலாவுடன் எடுத்திருந்த புகைப்படங்களையும் த்ரிஷா அந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார். அது மட்டுமன்றி அந்த வீடியோவிற்கு கீழே, “வெற்றிவேல் வீரவேல்” என்றும் எழுதியுள்ளார். 

 

200 காேடியை கடந்த பொன்னியின் செல்வன் 2:

 

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம், 480 கோடிகளை கடந்து ரசிகர்களை வியக்க வைத்தது. அதன் இரண்டாம் பாகம், வெளியான சிறிது நாட்களிலேயே 200 கோடி வசூலை குவித்து விட்டது. தமிழ்நாடு மட்டுமன்றி இந்தியாவின் வேறு சில மாநிலங்களிலும் படம் நல்ல வரவேற்பையே பெற்றுள்ளது. 

 

முதல் பாகத்தை மிஞ்சுமா இரண்டாம் பாகம்? 

 

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகவும் நன்றாக உள்ளதாக சில ரசிகர்கள் படம் பார்த்தவுடன் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். ஆனாலும் சிலர் சில காட்சிகளை தவிர படத்தில் வரும் வேறு எந்த காட்சிகளும் மனதில் ஒட்டவில்லை என்றும், இதற்கு முதல் பாகமே பரவாயில்லை என்றும் கூறினர். படத்தின் முதல் நாள் ரிலீஸின் போது வந்த விமர்சனங்களுக்கும் இரண்டாம் நாளின் இறுதியில் வந்த விமர்சனங்களுக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருந்தது. அதில் சில விளம்பர்த்திற்காக கூறப்பட்ட விமர்சனங்களாக இருக்குமோ என நம்பப்படுகிறது. 

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News