பீட்டா அமைப்பின் விளம்பர தூதராக திரிஷா இல்லை என அவரது தாயார் உமா தெரிவித்துள்ளார்.
பீட்டா அமைப்பின் உறுப்பினராக இருப்பதால் நடிகை திரிஷாவுக்கு எதிராக பல்வேறு கண்டனங்கள் எழுந்துள்ளன. சமூகவலைத்தளங்களிலும் மிக கீழ்த்தரமாக திரிஷாவை விமர்சித்தனர், இவருடைய டுவிட்டர் பக்கமும் ஹேக் செய்யப்பட்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக டுவிட் செய்யப்பட்டிருந்தது. இதனால் மனம்நொந்து போன திரிஷா டுவிட்டரில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளார்.
இதையடுத்து ஜல்லிக்கட்டை நான் எதிர்க்கவில்லை என்று திரிஷா விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் திரிஷாவின் தாயார் உமா இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்று மனு கொடுத்தார். அதில் தனது மகள் திரிஷாவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். டுவிட்டர் பக்கத்தை முடக்கியவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருப்பதாக தெரிகிறது.
பிறகு செய்தியார்களிடம் பேசிய திரிஷாவின் தாயார் உமா கூறியதாவது:-
திரிஷாவின் டுவிட்டர் பக்கம் ஹேக் செய்து தவறான தகவல்களை பதிவு செய்து உள்ளனர். திரிஷா ஜல்லிக்கட்டுக்கு எதிரானவர் அல்ல. ஜல்லிக்கட்டுக்கு எதிராக திரிஷா எப்போதும் கருத்து தெரிவித்தது இல்லை. மேலும் பீட்டா அமைப்பின் விளம்பர தூதராக திரிஷா இல்லை எனவும் அவர் கூறினார்