கொரோனாவிற்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் உலகம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் 69 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். படிப்படியாக இந்த எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.
இந்நிலையில், தனக்கும் தனது மனைவி ரீட்டா வில்சனுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதாக பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " நானும் ரீட்டாவும் இப்போது ஆஸ்திரேலியாவில் இருக்கிறோம். நாங்கள் கொஞ்சம் சோர்வாக உணர்கிறோம், எங்களுக்கு சளி இருப்பது போல் தோன்றியது, இதன் காரணமாக உடலில் நிறைய வலி இருந்தது. இதையடுத்து நாங்கள் இருவரும் மருத்துவ பரிசோதனை செய்ததில் எங்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.
சரி, இப்போது அடுத்து என்ன செய்வது? மருத்துவ அதிகாரிகளுக்கு நெறிமுறைகள் உள்ளன. பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் வரை நாங்கள் சோதனை செய்யப்படுவோம், தனிமைப்படுத்தப்படுவோம்."
— Tom Hanks (@tomhanks) March 12, 2020
இவ்வாறு பதிவிட்டு இருந்தார்.