இன்று முதல் ''இரும்புத்திரை'' திரைப்படத்தின் இசை!!

விஷால் மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும் 'இரும்புத்திரை'' படத்தின் இசை இன்று வெளியாகிறது!

Last Updated : Jan 20, 2018, 10:47 AM IST
இன்று முதல் ''இரும்புத்திரை'' திரைப்படத்தின் இசை!! title=

விஷால் மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் "இரும்புத்திரை". பி.எஸ்.மித்ரன் இப்படத்தை இயக்குகிறார். விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான "விஷால் ஃபிலிம் ஃபேக்டரி" மூலம் படத்தினை தயாரித்து வருகிறார். படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா அமைத்திருக்கிறார்.

இத்திரைப்படத்தில் விஷால், சமந்தா, அர்ஜுன், ரோபோ ஷங்கர், டெல்லி கணேஷ், வின்சென்ட் அசோகன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தில் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் இசை, இன்று வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, இப்படம் வரும் ஜனவரி 26-ம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News