வெளியானது " Thugs Of Hindostan " தமிழ் டிரைலர்!

ஆதித்யா சோப்ரா தயாரிப்பில், விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கத்தில் அமிதாப் பச்சன், அமிர் கான் நடித்துள்ள படம் " Thugs Of Hindostan ". இந்த படம் தீபாவளிக்கு அனைத்து திரையரங்கிலும் வெளியாக உள்ளது. 

Last Updated : Sep 28, 2018, 10:27 AM IST
வெளியானது " Thugs Of Hindostan " தமிழ் டிரைலர்! title=

ஆதித்யா சோப்ரா தயாரிப்பில், விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கத்தில் அமிதாப் பச்சன், அமிர் கான் நடித்துள்ள படம் " Thugs Of Hindostan ". இந்த படம் தீபாவளிக்கு அனைத்து திரையரங்கிலும் வெளியாக உள்ளது. 

யாஷ்ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் கத்ரீனா கைஃப் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை விஜய் கிருஷ்ண ஆச்சாரியா எழுதி இயக்குகிறார். இந்தியில் உருவாகும் இப்படம், தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் செய்யப்படவுள்ளது. 

இப்படம், கன்பெசன்ஸ் ஆப் ஏ தக் எனும் நாவலை மையமாக வைத்து, வரலாற்று பின்னணியில் உருவாகி உள்ளது. ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட தக்கீஸ் எனும் கொள்ளையர்களை பற்றிய கதை இது. 

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர், இந்தி மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாகி உள்ளது. தமிழில் வெளியாகியுள்ள இந்த டிரைலரை நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

Trending News