பரபரப்பான க்ரைம் த்ரில்லரா தீர்க்கதரிசி? திரை விமர்சனம் இங்கே!

நடிகர் சத்தியராஜ் நடிப்பில் பி.ஜி.மோகன் -எஸ்.ஆர்.சுந்தரபாண்டி இயக்கத்தில் கதநாயகி இல்லாமல் திரையில் வெளியாகியுள்ள  கிரைம் திரில்லர் படம் தீர்க்கதரசி.

Written by - Melwin S | Last Updated : May 5, 2023, 04:42 PM IST
  • பக்காவான க்ரைம் த்ரில்லராக உருவாக்கப்பட்டுள்ளது.
  • சத்யராஜ் கேமியோ ரோலில் வருகிறார்.
  • நொடிக்கு நொடி இதயத்துடிப்பை எகிற வைக்கிறது.
பரபரப்பான க்ரைம் த்ரில்லரா தீர்க்கதரிசி? திரை விமர்சனம் இங்கே! title=

படத்தின் ஒன்லைன்:

 

படம் போலிஸ் கட்டுபாட்டு மையத்திற்க்கு வரும் போன் கால் அதில் வரும் தகவல் சில நேரத்தில் நடக்க அதை போலிஸ் எவ்வாறு தடுக்கினறனர். அந்த நபர் யார் என்பது தான் படத்தின் ஒன்லைன் 

 

படத்தின் கதை:

 

படத்தில், அஜ்மல் காவல் அதிகாரியாக வருகிறார்.ஸ்ரீமன் காவல் கட்டுபாட்டு அறையின் அதிகாரி. இவர்களுக்கு அடிக்கடி போன் கால் வந்தபடி உள்ளது. அதே போல் வரும் ஒரு போன் காலை அனைவரும் அலட்சியமாக எடுத்துக்கொள்ள ஒரு அசம்பாவிதம் நடக்கிறது. இதையடுத்து காவல் அதிகாரிகள் உஷார் ஆகின்றனர். அந்த கால் செய்யும் நபர் யார்? படத்தில் நடைபெறும் காட்சிகளுக்கும் அவருக்கு என்ன தொடர்பு? என்பதே படத்தின் முழுக்கதை. 

 

படத்தை ஒரு நல்ல கிரைம் திரில்லர் ஆக எடுத்துள்ளனர் . அஜ்மல் கோ படத்திற்க்கு பிறகு நல்ல நடிப்பை இந்த படத்தில் தந்துள்ளார். பரபரப்புடனே ஆரம்பம் ஆகும் கதை அடுத்தடுத்த குற்றங்கள் நிகழ, அந்த அழைப்பில் சொல்வது போல நடக்க மேலும் பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. நம்மால் என்ன நடக்கும் என்று நினைத்துபார்க்க முடியாத அளவிற்க்கு திரைக்கதை அமைத்து இருகின்றனர்.

 

இதுவே படத்திற்க்கான வெற்றி. ஶ்ரீமன் தனது நடிப்பில் அந்த கதாபாத்திரமாக வாழ்ந்து நடித்துள்ளார் .நடிகர் சத்தியராஜ் படத்தில் மிக குறுகிய நேரம் நடித்து இருந்தாலும் அவர் சொல்லும் கருத்து மிகவும் கவனிக்வேண்டிய ஒன்றாக அமைந்துள்ளது . அவர் தனது கதபாத்திரத்துக்கு ஏற்ப நடித்துள்ளார் .

 

படத்தின் மைனஸ்:

 

இப்படம் தமிழகத்தில் நடந்த ஆனவக்கொலை மையமாக வைத்து எடுத்துள்ளனர் . படத்தில் கதாநாயகியாே காதல் காட்சிகளோ இல்லாமல் இருப்பதால் தோய்வடைய செய்கிறது. இதையே படத்தின் சொதப்பல்களில் ஒன்றாக கூறலாம். பாலசுப்ரமணியத்தின் பின்னணி இசை படம் பார்க்கும் போது கூடுதல்  பரபரப்பை இன்னும் அதிகம் ஆக்குகிறது. ஒளிப்பதிவினை லெட்சுமனன் சிறப்பாக காட்சி படுத்திருக்கிறார் . அந்த இரு இயக்குனர்கள் படத்தை வெற்றி படமாக்கிருக்கின்றனர். படம் மொத்ததில் கிரைம் திரில்லர் ஆக முடிக்காமல்  ஆனவப்படுகொலை எதிராக நல்ல சமுதாய கருத்தை கூறி முடித்துள்ளனர். படத்தை திரையரங்களில் சென்று குடும்பத்துடம் பார்க்க கூடிய படமாக அமைந்துள்ளது  தீர்கதரசி.

மேலும் படிக்க | உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் குலசாமி-திரை விமர்சனம் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEata

 

 

Trending News