தி கேரளா ஸ்டோரி படம் எப்படி இருக்கு? படம் பார்த்தவர்கள் சொன்ன ரிவியூ!

The Kerala Story Review: ஓ.டி.டி-யில் வெளியாகும் படங்களை விட இந்த படம் மோசம் இல்லை என்று கோவையில் தி கேரளா ஸ்டோரி படம் பார்க்க வந்தவர் பேட்டி.  

Written by - RK Spark | Last Updated : May 6, 2023, 06:45 AM IST
  • இந்த படம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.
  • இந்தப் படத்தில் நெகட்டிவ் அப்ரோச் ஒன்றும் இல்லை.
  • கல்லூரி பெண்களை லவ் என்ற பெயரில் மயக்குகின்றனர்.
தி கேரளா ஸ்டோரி படம் எப்படி இருக்கு? படம் பார்த்தவர்கள் சொன்ன ரிவியூ! title=

The Kerala Story Review: தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ப்ரூக் பாண்டு சாலையில் உள்ள தனியார் வணிக வளாகமான ப்ரூக் ஃபீல்டில் திரையிடப்பட்டது. இதற்கு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் இஸ்லாமிய கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  இந்த நிலையில் இன்று ப்ரூக் ஃபீல்டில் உள்ள திரையரங்கில் 1 காட்சி மட்டும் திரையிடப்பட்டது. இதில் 52 பேர் மட்டுமே முன்பதிவு செய்து படத்தை பார்த்தனர்.  இந்த நிலையில் படத்தைப் பார்த்து வெளியே வந்தவர்கள் இந்த படம் அனைவரும் பார்க்க வேண்டிய படம் என தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுந்தர்ராஜன் கூறும்போது,  இந்த படம் அனைவரும் பார்க்க வேண்டிய படம். இந்துவை முஸ்லிமாக கன்வெர்ட் பண்ணுகிறார்கள். இந்தப் படத்தில் நெகட்டிவ் அப்ரோச் ஒன்றும் இல்லை. கல்லூரி பெண்களை லவ் என்ற பெயரில் மயக்குகின்றனர். இதை வைத்து பயன்படுத்துகின்றனர். இதுதான் கதை, இந்தக் கதையில் வருவது எவ்வளவு தூரம் உண்மை எவ்வளவு தூரம் பொய் என்று நமக்கு தெரியாது. படம் நல்ல படம், இதை விட மோசமான படம் எல்லாம் வந்துள்ளது, இந்த படம் பெரிய தவறில்லை. ஓடிடி-யில் இதைவிட மோசமான படங்கள் வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க | Farhana: ஃபர்ஹானா பட பத்திரிகையாளர்கள் சந்திப்பிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!

மேலும் படம் வெளியாவதற்கு முன்பு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. கோவையில் மூன்று முக்கிய வணிக வளாகங்களில் படம் திரையிடப்பட்டது.  இந்த திரைப்படத்திற்கு பல்வேறு இஸ்லாமிய கட்சிகள் மற்றும் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  கோவையில் தி  கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வணிக வளாக முற்றுகையில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.  இதனால் காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  இதையடுத்து போராட்டக்காரர்கள் வணிக வளாகம் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இந்த நிலையில் திரைப்படத்தை திரையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள புரூக் பீல்ட்ஸ் மால் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சுமார் 150"க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். வணிக வளாகம் முன்பு திரைப்படத்திற்கு எதிராக  முழக்கங்களை எழுப்பியவாறே பேரணியாக வந்த போராட்ட குழுவினர் ஒரு கட்டத்தில் தடுப்புகளை மீறி முற்பட்டனர். 

மேலும், தி கேரளா ஸ்டோரிஸ் திரைப்படம் வெளியாகின்ற நிலையில் அது தொடர்பாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக கோவை மாவட்ட தலைவர் சார்புதீன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தி கேரளா ஸ்டோரிஸ் திரைப்படம் முஸ்லிம்களின் கலாச்சாரம், வாழ்வியலை தவறாக சித்தரித்து மத மோதலை உருவாக்கும் திரைப்படம். இந்தத் திரைப்படம் வெளியாவதை கண்டித்து தமுமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தி கேரளா ஸ்டோரிஸ் ட்ரெய்லரை பார்க்கின்ற போது எங்களுக்கு வருத்தமாக உள்ளது. நடைமுறையில் எங்களின் இந்து, கிறிஸ்தவ சகோதரர்களுடன் நாங்கள் பழகுவதற்கும் ட்ரெய்லரில் காட்டப்பட்டதற்கும் முற்றிலும் மாறாக உள்ளது. இவ்வாறு முஸ்லிம்களை எதிரிகளாக சித்தரிக்கும் புர்கா, கேரளா ஸ்டோரிஸ் போன்ற திரைப்படங்கள் ரமலான் மாதத்திலும் கூட நிறைய வந்து கொண்டிருக்கிறது.

முஸ்லிம்கள் கலாச்சாரத்திற்கும் இந்த திரைப்படங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் வரும் இது போன்ற படங்களுக்கு அரசு ஆதரவாக இருப்பது வேதனை அளிக்கிறது. சமீபத்தில் மோடி பற்றி வந்த பிபிசி ஆவணப்படம் உடனடியாக தடை செய்யப்பட்டது. கருத்து சுதந்திரம் என்பது பொதுவாக இருக்க வேண்டும். முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கும் திரைப்படங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது. அதை எதிர்த்து நாங்கள் நியாயமாக போராடினால் எங்களை தேச துரோகிகள் என்கிறார்கள். இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என நாங்கள் போராடுகிறோம். இந்த திரைப்படத்தை தயாரித்தவர் ஒரு குஜராத்தி எனவே அவரின் பின்னணி குறித்தும் விசாரிக்க வேண்டும். இத்தகைய படங்களை தயாரிப்பவர்கள் அனைவரும் ஆர் எஸ் எஸ் பின்னணி கொண்டவர்களாகவே இருக்கின்றனர். இது போன்ற படங்கள் மூலம் தமிழகத்தை கலவர பூமியாக மாற்றும் சதி திட்டத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

மேலும் படிக்க | உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் குலசாமி-திரை விமர்சனம் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News