"பிகில்" படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் (Vijay) நடித்து வரும் திரைப்படம் "மாஸ்டர்". இது நடிகர் விஜய்யின் 64 வது பாடமாகும். இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை டிசம்பர் 31 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய்யுடன் முதல் முறையாக இணைந்து பணியாற்றும் திரைப்படம் இதுவாகும். இதற்கு முன்பு கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய "கைதி" பெரிய அளவில் வெற்றி பெற்று அனைவரின் பாராட்டையும் பெற்றது. இந்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜயுடன் இணைந்துள்ள நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.
மேலும் "மாஸ்டர்" படம் குறித்து வெளியாகி உள்ள தகவல்கள் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. நீங்களும் அதிர்ச்சி மற்றும் ஆச்சரியம் அடைவீர்கள். அப்படி என்ன தகவல் என்ன என்று தானே நினைக்கீர்கள்? ஆம் "மாஸ்டர்" படத்தின் வியாபாரம் பற்றி தான். அதாவது இன்னும் படப்பிடிப்பு முடிவடையாத நிலையில், எப்பொழுது படம் வெளியிடப்படும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பும் எதுவும் அறிவிக்காத நிலையில், இப்படத்தின் வியாபாரம் முடிந்து விட்டது என்று தகவல்கள் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது இப்படத்தின் சேட்டிலைட் உரிமை சன்டிவி பெற்றுள்ளது. அதபோல தமிழ்நாடு, ஆந்திரா கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் வியாபாரம் ஆகிவிட்டதாம். அது மட்டுமில்லாமல் டிஜிட்டல் உரிமம், வெளிநாட்டு ரிலீஸ் உரிமையையும் விற்பனையாகி விட்டது. சுமார் 250 கோடிக்கு மேல் வியாபாரம் முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது. அப்படி பார்த்தால், ரூ. 150 கோடியில் தயாரிக்கப்பட்டு வரும் "மாஸ்டர்" படம் இப்பொழுதே கிட்டத்தட்ட லாபம் ரூ.100 கோடியை சம்பாதித்துள்ளது.
இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ரம்யா அர்ஜுன் தாஸ உட்பட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இருபது நாட்கள் நடந்த நிலையில், அதற்கு அடுத்து டெல்லியில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து தற்போது கர்நாடக மாநிலத்திலுள்ள சிறைச்சாலை ஒன்றில் நடத்தப்பட்டு வருகிறது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.